ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் - பெலாரஸ் ஜனாதிபதி

Published By: Rajeeban

29 May, 2023 | 11:04 AM
image

ரஸ்யா பெலாரசின் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என பெலாரசின் ஜனாதிபதி அலெக்ஸான்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவிலிருந்து மின்ஸ்கிற்கு சில அணுவாயுதங்களை மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் ரஸ்ய பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என  குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான பெலாரஸ் ஜனாதிபதி பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.ரஸ்யாவிற்கும் எங்களிற்கும் இடையில் உள்ள உறவுகள் போல வேறு எந்த நாடும் நெருக்கமான உறவை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

இது மிகவும் இலகுவான விடயம் பெலராசுடனும் ரஸ்யாவுடனும் இணையுங்கள் உங்களிற்கு அணுவாயுதங்கள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத பரவல் அதிகரித்துள்ள - ரஸ்யா உக்ரைனிற்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்தப்போவதாக எச்சரித்துவரும் நிலையில் வெளியாகியுள்ள பெலாரஸ் ஜனாதிபதியின்  கருத்துகள் சர்வதேச அளவில் கரிசனையை ஏற்படுத்தக்கூடும்.

பெலாரஸ் அதிகாரிகள் மொஸ்கோவிற்கும் மின்ஸ்கிற்கும் இடையிலான உடன்படிக்கையை தொடர்ந்து ரஸ்யாவிலிருந்து சில அணுவாயுதங்களை பெலாரசிற்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது என வியாழக்கிழமை தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-02 18:51:38
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07
news-image

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க...

2023-10-01 13:04:10
news-image

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக சீன ஆதரவு...

2023-10-01 07:23:16
news-image

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல்: இந்திய -...

2023-10-01 09:23:12
news-image

அமைச்சராக ஒன்ராறியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி...

2023-09-30 20:09:56
news-image

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில்...

2023-09-30 13:23:11
news-image

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி

2023-09-30 10:40:54
news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08