குடியரசு தினம் தொடர்பான பிரதிபலிப்புக்கள்

Published By: Digital Desk 3

29 May, 2023 | 10:46 AM
image

எழுதியவர் - சாந்தனி கிரிண்டே

1972 மே 22 திங்கட்கிழமை சிலோன் டெய்லி நியூஸ் இதழில் “அரசியலமைப்பு உருவாக்கம்” என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில், அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா பின்வரும் வார்த்தைகளை எழுதினார். “இன்று, இலங்கை மாதா எப்போதும் அவளது மக்களுக்கு என்னவாக இருந்தாளோ மீண்டும் ஒருமுறை அதுவாக உலகிற்கு மாறுவாள்: இன்றைய இலங்கை மக்கள் தமக்கான சுதந்திரம், இறையாண்மை மற்றும் நாட்டிற்கான சுதந்திரத்தை புதிய இலங்கைக் குடியரசை அமைப்பதன் மூலமாக இலங்கை மற்றும் பிரித்தானிய முடிக்கிடையிலான தொடர்பை இறுதியாகவும் முழுமையாகவும் வேறாக்குவார்கள்”.

இந்த நாள், 1970 ஜூலையில் நாட்டிற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஐக்கிய முன்னணி (UF) அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கவால் தலைமையேற்கப்பட்டு டொமினியன் அந்தஸ்துக்கான திரையை விலக்குவதற்கும் பல தசாப்த காலனித்துவ அரசியலமைப்பு ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்குமான அரசியலமைப்பு பேரவையின் 22 மாத விவாதங்களின் கூட்டினை குறிக்கின்றது.

அரசியலமைப்பு வரைவு செயன்முறையின் பிண்ணனியில் வழிகாட்டுபவரான டி சில்வா, இது “உண்மையில் ஒரு வீட்டில் உருவான தயாரிப்பு” என்றும், அதன் சட்டவாக்கத்தின் மூலமாக இலங்கையர்கள் தாங்கள் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக முடியாட்சி அரச முறைமையுடனான தொடர்புகளை துண்டிப்பார்கள் என்றும் அழைத்தார்.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த நாள் அதன் தேர்தல் உறுதிமொழியான அதிகாரத்திற்கு வந்தவுடன் ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றுவது என்பதை நிறைவேற்றுவதைக் குறித்தது. அதன் 1970 விஞ்ஞாபனத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவதற்கும் புதிய குடியரசுக் கட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் கூட்டமைப்பு மக்களிடம் ஆணையைக் கோரியது. 

மே 1970 பொதுத் தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெற்றதன் மூலம், திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கம் அவர்களின் உறுதிமொழியை ஆர்வத்துடன் நிறைவேற்ற ஆரம்பித்தது. இருப்பினும், அரசியலமைப்பை உருவாக்கும் செயன்முறை அதனுடைய உருவாக்கத்திலிருந்து ஒருமனதானதாக இல்லை. மே 22, 1972 அன்று அரசியலமைப்பு பேரவையில் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசியலமைப்பு பேரவையின் விவாதங்களில் பங்கேற்றிருந்த போதிலும், பின்னர் புதிய அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்க, தமது கட்சியின் தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கினார்.

“புதிய அரசியலமைப்புச் சட்டம் போன்ற அடிப்படை விடயத்திலும் கூட மக்களின் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களில் அக்கறை இல்லை என்பதை அரசாங்கம் அதன் செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் வெளிப்படையாகக் காட்டியுள்ளதுடன் சுதந்திரமான விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கு உகந்த சூழலில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த நியாயமான வாய்ப்பைக் கூட வழங்காமல் அதன் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதன் மூலமாக அதன் சமயம் சார்ந்த, அரசியல் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளை மக்களின் மீது திணிப்பதற்கு அது உறுதியாக உள்ளது”.

பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சி (FP), அது அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, சிங்களம் மற்றும் தமிழுக்கு சம அந்தஸ்து வழங்குவதற்கான அதன் முன்மொழிவு நிராகரிக்கப்பட்ட பின்னர், அரசியலமைப்பு பேரவையின் அமர்வுகளைப் புறக்கணித்தது. புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளில் அது விலகியிருந்தது.

1972 அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு நல்லதல்ல, மற்றும் நாட்டில் வகுப்புவாத அடிப்படையில் பிளவுகளை ஆழமாக்கியது. K. M. de சில்வா தனது A History of Sri Lanka என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“தமிழர்கள், பழங்குடியினர் மற்றும் இந்தியர்கள் மீதான விரோதத்தின் ஆரம்பநிலை, ஆரம்பத்திலிருந்தே (1970 இல் UF கூட்டணியின் வெற்றியிலிருந்து) காணக்கூடியதாக இருந்தபோதிலும், 1972 அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டமை குறிப்பாக சிங்களவர்களுக்கும் பூர்வகுடி தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக தீவில் இனவாத விரோதத்தின் ஒரு புதிய கட்டத்தின் முக்கியமான ஆரம்ப புள்ளியாக இருந்தது.”

சர்ச்சைக்குரிய இரண்டு முக்கிய விடயங்களாவன மொழி உரிமை மற்றும் மதமாகும். 1972 அரசியலமைப்பின் அத்தியாயம் II, “இலங்கைக் குடியரசு பௌத்தத்திற்கு முதன்மையான இடத்தை வழங்க வேண்டும், அதன்படி மற்றைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிசெய்யும் அதே நேரத்தில் பௌத்தத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகும்” என்றும், சிங்களம் அரசமொழியாக அங்கீகரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றது. 

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த அன்று, அரசியலமைப்பு பேரவையின் தலைவராக செயற்பட்ட ஸ்டான்லி திலகரட்ன, மதியம் 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்கு கொண்டு வரும் சான்றிதழில் கையொப்பமிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு திருமதி பண்டாரநாயக்கா இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்ற அதே நேரத்தில் கடைசி ஆளுநர் நாயகமாக இருந்த வில்லியம் கோபல்லவ முதல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு, இது ஒரு கசப்புடனான இனிமையான தருணமாகும், ஏனெனில், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதம மந்திரியாக இருந்த அவரது மறைந்த கணவர் S. W. R. D. பண்டாரநாயக்க, நாட்டிற்கு அடிப்படை உரிமைகள் சாசனத்தை அளித்து அதை குடியரசாக மாற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான ஒரு விசேட குழுவினை அமைப்பதற்கான தீர்மானத்தை பிரதிநிதிகள் பேரவையில் முன்வைத்தார். மௌரீன் செனவிரத்ன உலகின் முதல் பெண் பிரதமர் என்ற புத்தகத்தில் சிறிமாவோவின் வாழ்க்கை வரலாற்றில் எழுதுகையில், “இது அவரது கணவர் நீண்ட காலமாக நேசித்த ஒரு கனவென்பதுடன், மிகவும் விரும்பிய இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு அசாதாரணமான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமையைக் கொடுத்தது.”

பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இலங்கை குடியரசின் உருவாக்கம் மக்களால் பாராட்டப்பட்டது. அது இலங்கை பிரித்தானிய அரசுடனான உறவுகளை துண்டித்தமை மட்டுமல்லாது கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகால முடியாட்சி நிறைவுக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 

கலாநிதி கொல்வின் R. de சில்வா அவதானித்தபடி, “அரசியலமைப்பினால் நியமிக்கப்பட்ட இலங்கைக் குடியரசின் பணியானது, அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உட்பட ஒரு சோசலிச ஜனநாயகத்தின் நோக்கங்களை நனவாக்குவதாகும். நோக்கம் உன்னதமானது, இலக்கை அடைவதற்கான பாதை கடினமானதாக இருக்கும், ஆனால் பரந்தளவிலான இலங்கை மக்கள் இந்த இலக்கை தங்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறையாக போற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும், ஐந்து தசாப்தங்கள் கடந்தும், 1972 ஆம் ஆண்டு குடியரசாக மாறிய போது, அந்த நாடு தனக்காக நிர்ணயித்த உயரிய இலக்குகளில் பலவற்றை இலங்கையர்கள் இன்னமும் உணரவில்லை.

சாந்தனி கிரிண்டே ஒரு சிரேஷ்ட அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரையாளர் என்பதுடன் இலங்கையில் நீண்டகாலமாக பாராளுமன்ற நிருபராக பணியாற்றி வருகின்றார். அவரை chandani.kirinde2016@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக அணுகலாம். Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதன் www.factum.lk மூலமாக அணுகலாம். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52