தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்ற இலங்கை தமிழ் மாணவி - ஏழ்மை நிலையறிந்து உதவினார் தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published By: Rajeeban

29 May, 2023 | 10:02 AM
image

மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும்  ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது

அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13