பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மாணவன் சாதனை

Published By: Digital Desk 5

29 May, 2023 | 05:45 PM
image

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான  தேவேந்திரன் மதுஷிகன்  (வயது-20) பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை ஒரு மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன்  பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள சுமார் 30 கடல் மைல் தூரத்தை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி  டிமேல்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  கலாமதி பத்மராஜா , மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் ஸ்ரான்லி டிமேல் லெம்பேட்  ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞ.அன்ரனி டேவிட்சன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த ,ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ,தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ்,ஏ.கே.ஆர்.நிறுவன பணிப்பாளர் றொஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு வரவேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59