க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவனின் தந்தையை பலியெடுத்த ரிப்பர் வாகனம் - கிளிநெச்சியில் சம்பவம்

29 May, 2023 | 06:30 AM
image

கிளிநொச்சி ஏ -9 வீதி உமையாள்புரம் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த  கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் விஸ்வமடு பகுதியிலிருந்து  ஏ9 வீதியூடாக ஆழியவளை நோக்கிச்சென்றுகொண்டிருந்த போது பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனம் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது  முன்னாள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கலைரூபன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தில் பலியானவரின் மகன் இன்று (29) இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவராவார்.

விபத்தினை தொடர்ந்து  ரிப்பர்  சாரதி கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ரிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா இந்திய விவகாரம் -இலங்கை இந்தியாவிற்கு...

2023-09-26 08:34:02
news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49