மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் - விதுர விக்ரமநாயக்க

Published By: Vishnu

28 May, 2023 | 05:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மத சுதந்திரம் மற்றும் அதன் விடயங்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். அத்துடன் மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விசாரணை ஆரம்பித்திருக்கிறோம் என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பெளத்த மதம் உட்பட மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் அண்மையில் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடாஷா எதிரிசூரிய என்ற பெண்ணொருவர் பெளத்த மதத்தை அவமானப்படுத்தும் வகையில்  பொது இடமொன்றில் உரையாற்றி இருந்தார். 

இவரின் உரை தொடர்பாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதன பிரகாரம் குறித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். பெளத்த சாசன அமைச்சின் நேரடி தலையீட்டின் மூலமே இதனை மேற்கொண்டோம்.

அத்துடன் நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகவும் இதனை தடுப்பதற்காகவும் பொலிஸாருடன் இணைந்து நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இ்ம்பெறும்போது எமது அமைச்சுக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

புத்தசாச அமைச்சு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக எந்தநேரமும் விழிப்புடனே இருக்கிறது. அதனாலே நடாஷாவின் காணொளி இணைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு  ஒரு சில மணித்தியாலங்களில் நடாஷாவை கைதுசெய்ய முடியுமாகியது.

எனவே மதங்களை அகெளரவப்படுத்தி, அதன் விடயங்களை திரிபுபடுத்துவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவர எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06