க.பொ. த. சாதாரண தர பரீட்சை ஆரம்பம் : தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் என்கிறார் பரீட்சை ஆணையாளர்

Published By: Vishnu

28 May, 2023 | 05:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. பரீட்சைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பல்வேறுசவால்களுக்கு மத்தியில் 6மாதங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகிறது.

ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர். 

இதற்காக நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பாதுகாப்பு

ஆரம்பமாக இருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படும்.

 அதேபோன்று அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் முன்னேற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மத்திய நிலையங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்காக ஈடுபடுத்தப்படும் சிசு செரிய பஸ் சேவை, பரீட்சை முடியும்வரை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

பரீட்சைக்கு தோற்றும் சிறைக்கைதிகள்

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கும் கைதிகள் 10 பேர் பரீட்சக்கு தோற்ற இருக்கின்றனர். அவர்களுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் வெலிகடை மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருப்பதாகவும். அவர்களில் ஒருவர் ஆயுள்கால தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு  விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு திட்டம்

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பரீட்சை மத்திய நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அன்று ஆரம்பிக்கப்படும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி முடிவடைகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06