பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில் எவராலும் வெற்றிபெற முடியாது - ரோஹித அபேகுணவர்தன

Published By: Vishnu

28 May, 2023 | 06:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

காட்டு சட்டத்தை இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் எந்த தரப்பினராலும் வெற்றி பெற முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான தீர்மானத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.

சேதன பசளை திட்டம் சிறந்து.இருப்பினும் ஒரே கட்டத்தில் இரசாயன உர பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் சேதன பசளை திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

சேதன பசளை திட்டம் தொடர்பில் தவறான ஆலோசனைகளை வழங்கிய துறைசார் நிபுணர்கள் இன்று ஒன்றும் அறியாதவர்களை போல் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகிறார்கள்.காலம் அவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.நாடு வங்குரோத்து நிலை அடைந்த பின்னணியில் அரசாங்கத்தை பொறுப்பேற்க அவர் மாத்திரமே தற்துணிவுடன் முன்னிலையானார்.பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் எம்மால் வீதிக்கு இறங்க முடியாத நிலை காணப்பட்டது.காட்டு சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார்.அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவார்கள்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன வெகுவிரையில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும்.பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எவராலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்சி யாப்பின் பிரகாரம் நானே ஸ்ரீலங்கா...

2024-06-24 20:42:56
news-image

கல்கமுவையில் முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர்...

2024-06-24 20:42:33
news-image

15 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் வயலிலிருந்து...

2024-06-24 20:36:51
news-image

குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை தொடர்பாக...

2024-06-24 17:17:57
news-image

அரசாங்கத்திலுள்ள அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இரண்டே...

2024-06-24 19:15:14
news-image

போதைப்பொருட்களுடன் 682 பேர் கைது

2024-06-24 20:39:08
news-image

வெல்லவாயவில் சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய...

2024-06-24 18:44:36
news-image

சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடி :...

2024-06-24 17:19:11
news-image

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக...

2024-06-24 17:23:59
news-image

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள்...

2024-06-24 17:22:31
news-image

கடைக்குச் செல்வதாக கடிதம் எழுதி விட்டு...

2024-06-24 17:13:25
news-image

சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன்...

2024-06-24 20:51:15