உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் மலேசிய இந்திய வர்த்தக சங்கம் இணைந்து பன்னாட்டு சிறு குறுந்தொழில் மாநாட்டினை (INTERNATIONAL MSME B2B MEET) எதிர்வரும் ஜூன் 27, 28ஆம் திகதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தவுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்தும் சில தொழில் முனைவோர்கள் மலேசியாவுக்கு பயணிக்கவுள்ளனர்.
மேலும், இந்தியா, வளைகுடா நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா, கொரியா, இந்தோனேஷியா, ஜப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் தொழில் முனைவோர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட்ட மாநிலங்களிலிருந்து சிறு குறுந்தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே B2B டேபிள் வழங்கப்படும்.
இந்த நிகழ்வினூடாக மலேசியாவில் உள்ள தொழிலதிபர்கள் பிற நாட்டு தொழில் முனைவோர்களை சந்தித்து, அதன் மூலம் தங்களுடனான தொழில் வளங்களை விரிவுபடுத்தவும், சந்தைப்படுத்தவும், கிளை ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் பங்குதாரர்களை உருவாக்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு மலேசிய சிறு, குறுந்தொழில் அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமையேற்கவுள்ளார்.
SME Corp முதன்மை செயலதிகாரி முன்னிலையில் நிகழும் இந்த மாநாட்டில் இந்திய மலேசிய வர்த்தக சங்கத் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணனும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'திரைகடல் ஓடி திரவியம் தேடு' என்ற கூற்றுக்கிணங்க, நம் தொழில் வளங்களை பல்வேறு நாடுகளில் விரிவுபடுத்தும் விதமாக இந்நிகழ்வு அமையவுள்ளது என உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவருமான செல்வகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைய +60166167708 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெறலாம் என உலகத்தமிழ் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM