நீண்ட காலமாக சிறையில் தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முனைப்புகள் கைவிடப்பட்டுள்ளது. வழக்குகளின் இடமாற்றம் குறித்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆஜராகும் சட்டத்தரணிகள் எடுத்த முயற்சின் பிரகாரம் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பிலான மேலும் தெரியவருவதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ் அரரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்து இருப்பினும்  கொழும்பிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகளை துரிதப்படடுத்த முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டு ம38 இற்கும்  மேற்பட்ட வழக்குகளை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வழக்கில் ஆஜராகும் சிரேச்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் தமிழ அரசியல் கைதிகள் வழக்கு இடமாற்றம் செய்யப்பட கடுமையான விசனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தாக தெரியவருகின்றது.

அதேநேரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்குகள் தமிழ் பேசும் நீதிமன்றங்களில் குறிப்பாக வடக்கு கிழக்க மாகாண நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுதத்னர் மேலும் தாங்கள் தற்போதைய நிலையிலேயே பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடு்த்துள்ள நேரத்தில் வழக்குகளை வெளி மாவட்டத்திற்கு மாற்றுவவது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அது மட்டுமன்றி மொழி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் வழக்கு விசாரணைகளில் மீண்டும் தாமதங்கள் ஏற்படலாம். புதிய சட்டத்தரணிகளை அனுகுவதும் சிறைசாலைகளுக்கு இருந்துக்கொண்டு இயலாத விடயம் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர் இவ்வாறான நிலையில் தற்போது தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகமை நீதிமன்றத்திற்கு மாற்றும் நடவடிக்கை முற்றுமுழுதான கைவிடப்பட்டுள்ளதாக அவ்வழக்கில் ஆஜராகவும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிசம்பர் மாத்திலிருந்து இந்த வழக்கு விசாரணைகள் ஹோமாகமவிற்கு மாற்றப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.