டோனி போன்ற தலைவரை மீண்டும் நாங்கள் பார்க்கப்போவதில்லை - இறுதிப்போட்டிக்கு முன்னர் சென்னை ரசிகர்கள்

Published By: Rajeeban

28 May, 2023 | 01:55 PM
image

எம்எஸ்டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்அணியும் குஜராத் அணியும் 2023 ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் இன்று மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்பாக சென்னையின் டோனி  ரசிகர்கள் டோனிக்கான விசேட செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.

ராஞ்சியை சேர்ந்த டோனிக்கும் சென்னைக்கும் விசேட பிணைப்புள்ளது எம்ஏசிதம்பரம் மைதானத்தில் அவர் சென்னைஅணிக்காக  பலபோட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் விளையாடுவதற்காக களத்தில் இறங்கும் தருணங்களில் எல்லாம் ரசிகர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல்லின்டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் டோனியின் ரசிகர்களின் விசேட செய்தி காணப்படுகின்றது.

பத்துவருடங்களாக ஐபிஎல் கடமைகளி;ல்நான் ஈடுபட்டுள்ளேன்,டோனியை பார்க்கவேண்டும் என்பதே ஆரம்பத்தில்எனது பணிக்கான ஒரே நோக்கமாகயிருந்தது என  தெரிவித்துள்ள ஆகவே நான் இந்த பணியில் என்னை தொடர அனுமதிக்கவேண்டும் என விசேட அனுமதியை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள்தோனியை மிஸ் பண்ணப்போகின்றோம் என நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ள அவர் இதுதான் டோனியின் இறுதி ஐபிஎல் என மக்கள்தெரிவிக்கின்றனர் அது உண்மையா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்கு பலர் தலைமைதாங்குவார்கள் ஆனால் டோனிபோன்ற ஒருவரை மீண்டும் நாங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகிடைக்காது அவர் மீண்டும் மீண்டும் எனது கனவுகளில் வருகின்றார் எனவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

நிலைமை எவ்வாறானதாகயிருந்தாலும் டோனி மிகவும் நிதானமானவர் அமைதியானவர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு ரசிகர் தல எப்போதும் தலதான் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது சிறுவயதிலிருந்து எப்போதும் டோனிதான் என்றாவது ஒருநாள் அவரை பார்ப்போம் என சிந்தித்தவேளை நான் அவரை பார்த்தேன் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ள முடியுமா என நான் எண்ணியவேளை அதுவும் நடந்தது என மற்றுமொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09