வீட்டின் முன்னால், வீதியோரம் கிடந்த புற்களை பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது கெப் ரக வாகனமொன்று மோதியதில், அந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (27) அச்சுவேலியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மற்றொருவர் காயமடைந்துள்ளதோடு, வாகன சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
அச்சுவேலி, வல்லை, பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று காலை வீட்டுக்கு முன்னாள் குடும்பஸ்தர் ஒருவர் புற்களை பிடுங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்த கெப் ரக வாகனம் அந்த நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, அருகில் இருந்த மற்றொருவரும் விபத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த வாகனம் நபரின் மீது மோதியதுடன், அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதான நபர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது எனவும், வாகனத்தை செலுத்திய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM