ராஜபாளையம் அருகே, ஒரு கையை இழந்த தந்தையுடன் நீச்சல் பழகச் சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கையை இழந்த இவர், கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இவரது மனைவி மதன பிரியா. இவர், மில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கோகுல் கிருஷ்ணன் (8), வர்ஷனா ஸ்ரீ (6) என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், மதன பிரியா வழக்கம் போல தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயம் சக்திவேல், குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, லொறி டியூப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.
அப்போது இரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அந்த நேரத்தில் ஒற்றை கையுடைய சக்திவேலால் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இதையடுத்து, அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கினர்.
இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகளும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM