பிம்ஸ்டெக் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வியாண்டில் உயர் கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்குமாறு இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம் இலங்கையர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
அதன்படி வரலாறு, பௌத்தம் மற்றும் தத்துவவியல், இந்துநெறி, சுற்றாடல் கற்கைநெறி, நிறைபேறான அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடநெறிகளில் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.
இப்புலமைப்பரிசிலானது உள்நுழைவுக் கட்டணம், கற்கைநெறிக் கட்டணம், தங்குமிடக் கட்டணம் மற்றும் மாதாந்த செலவின உதவித்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக அல்லது foreignstudents@nalandauniv.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக பெற முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM