(எம்.வை.எம்.சியாம்)
திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்த யுவதியொருவர் அமில வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இன்றைய தினம் (27) மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுராகொட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே அமில வீச்சு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண வைபவத்தை காலி பிரதேசத்தில் இன்று நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், யுவதி திருமணத்துக்கு புறப்பட்டுச் செல்ல, வீட்டில் தயாராகிக்கொண்டிருந்தபோதே அவர் அமில வீச்சு தாக்குதலுக்குள்ளானார்.
அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்குள் சென்ற நபரொருவர் யுவதி மீது அமில வீச்சு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம, மதுராகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
எனினும், பெற்றோரின் அறிவுரைக்கமைய, யுவதி அந்த இளைஞனுடனான காதலை துண்டித்துக்கொண்டுள்ளார்.
இதனால் காதலியை பழிவாங்கும் நோக்கில் அந்த இளைஞன் அமில வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM