(நா.தனுஜா)
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையுடன் தாம் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.ரவிக்குமார், இலங்கையில் சமூக மட்டத்தில் இயங்கிவரும் அமைப்புக்களுடன் கூட்டிணைந்து மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையை ஆரம்பிக்கவிருப்பதாகக் கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று பிரித்தானியத் தமிழர் பேரவை அறிவித்தது. அதன்படி இச்செயன்முறை முன்னெடுக்கப்படவுள்ள விதம், கூட்டிணைந்து பணியாற்றவுள்ள நபர்கள் மற்றும் அமைப்புக்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரியபோதே வீ.ரவிக்குமார் கேசரியிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் பிரித்தானியத் தமிழர் பேரவை மிகநெருக்கமாகப் பணியாற்றிவருவதாகவும், அதனால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை எனப் பல்வேறு தரப்பினர் விமர்சித்தபோதிலும் தாம் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் அழுத்தம் பிரயோகித்துவந்ததாகவும் சுட்டிக்காட்டிய ரவிக்குமார், அதன்விளைவாகத் தற்போது ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை வரை முன்னேறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம்வகிப்பதாகவும், எனவே இலங்கை தொடர்பில் வலுவானதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டுமாயின் குறைந்தபட்சம் 24 நாடுகளின் வாக்குகளையேனும் திரட்டிக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்த அவர், இருப்பினும் அவ்வாறு நாடுகளின் வாக்குகளைத் திரட்டுவதற்குரிய பேச்சுவார்த்தைகளை இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளோ அல்லது சிவில் சமூக அமைப்புக்களோ பெருமளவுக்கு முன்னெடுப்பதில்லை என்று கவலை வெளியிட்டார்.
எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் 47 நாடுகளில் வெறுமனே 13 மேற்குலகநாடுகளின் வாக்குகளை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தைக் கொண்டுவரமுடியாது என்றும், மாறாக எஞ்சிய 34 நாடுகளில் பெரும்பான்மையாக உள்ள ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் ரவிக்குமார் சுட்டிக்காட்டினார்.
ஆகவே சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெறுமனே வாய்மொழிமூலம் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, அவர்களிடம் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்போது அதுகுறித்து அவர்கள் விசேட அவதானம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுவதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM