நடிப்பிற்காக தேசிய விருதுப் பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
'ஃபேமிலி மேன்' எனும் விருது பெற்ற இணையத் தொடருக்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில், “ரகு தாத்தா - தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை விவரிக்கிறது.
கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கடுமையான கலகக்கார இளம் பெண்ணின் கதை இது” என்றார்.
இதனிடையே 'கே ஜி எஃப்', 'காந்தாரா' ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் நேரடியாக தயாரித்திருக்கும் ரகு தாத்தா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது.
இப்படத்தினை இந்த ஆண்டிற்குள் வெளியிடுவதற்கான முயற்சிகளையும் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM