'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அடியே' திரைப்படத்திலிருந்து 'வா செந்தாழினி..' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் இந்த பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
'திட்டம் இரண்டு' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'.
இதில் ஜி.வி. பிரகாஷ் குமார், கௌரி கிஷன், வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் என பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடைபெற்ற வா செந்தாழினி..' எனத் தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் பி கே பகவதி எழுத, சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். மெல்லிசையும் காதலும் பின்னிப்பிணைந்து தேனிசையாக வருடும் இந்த பாடல், இளம் தலைமுறையினரின் விருப்ப பாடலாக வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM