ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Ponmalar

27 May, 2023 | 02:02 PM
image

பிறந்து ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான பிள்ளைகளில் சிலருக்கு ஓடிடிஸ் மீடியா எனும் நடு காது தொற்று பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பினை துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெறாவிட்டால், காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சில பிள்ளைகளுக்கு படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் போது காது வலியால் அழும். ஒரு காதையோ அல்லது இரண்டு காதையோ பிடித்துக் கொண்டு அழலாம். இதன் காரணமாக வழக்கமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் சில பிள்ளைகளுக்கு ஒலிகளை கேட்பதில் பாதிப்போ அல்லது அதற்கு பதிலளிப்பதில் சிக்கலோ ஏற்பட்டாலும், தலைவலி, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவை நடு காதில் செவிப்பறைக்கு அருகே தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதலாம்.

சிலருக்கு காதில் தொற்று பாதிப்பு ஏற்படும். அதிலும் நடுக்காதில் ஏற்படும் தொற்று பாதிப்பிற்கு ஓடிடிஸ் மீடியா என மருத்துவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். காதுக்கு பின்பகுதியில் உள்ள காற்று நிரப்பப்பட்ட இடத்தில் சிறிய அளவிலான அதிர்வலைகளைத் தாங்கும் எலும்புகள் அமைந்திருக்கிறது. இங்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

பெரும்பாலும் இத்தகைய பாதிப்புகள் 24 மணித்தியாலத்திலிருந்து 48 மணி தியாலத்திற்குள் உடலின் வெப்பநிலை இயல்பான அளவில் திரும்பியவுடன், தானாக சீராகிறது. சில நேரங்களில் எத்தகைய அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதனை துல்லியமாக அவதானித்து அதற்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளை மருத்துவர்கள் Pneumatic Otoscope எனும் பிரத்யேக கருவி மூலம் பாதிப்பினை துல்லியமாக அவதானிக்கிறார்கள். சிலருக்கு Tympanometry, Acoustic Reflectometry, Tympanocentesis போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவின்படி உங்களின் பாதிப்பை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ப ஆன்ட்டிபயாட்டிக் தெரபி எனும் சிகிச்சையை வழங்குவர். சில பிள்ளைகளுக்கு பாதிப்பின் தன்மையை பொறுத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அங்கு பிரத்யேக குழாயினை பொருத்தி நிவாரணம் அளிப்பர்.

டொக்டர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20