கிழக்கு மாகாண ஆளுநரின் எண்ணக் கருவிற்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி திட்டம் இன்று காலை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பாசிக்குடாகடற்கரையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள வீதிகள், பொது இடங்கள், யானைக் கல் கடற்கரை பகுதி என பொலித்தின் பாவனைப் பொருட்க்கள், கழிவுப் பொருட்க்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன.
நீர் தேங்கி காணப்படும் இடங்கள் கணரக இயந்திரங்களின் உதவியுடன் மண் போட்டு நிரப்பட்டது. கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைக் காடுகள் அகற்றப்பட்டன.
சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக் கூடிய வகையில் கடற்கரையினை மாற்றம் செய்யும் வகையில் இப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் பிரதேச சபையுடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரா சபை, கல்குடா பொலிசார், பொதுச் சுகாதார பிரிவினர் பிரதேசத்தின் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் என்பன இணைந்து இவ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ் பணியானது பொது இடங்கள், வீதிகள் என பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு கிழமையும் இச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பிரதேசம் தோறும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இந் நிகழ்ச்சி திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நவநீதன், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.சந்திரகுமார, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பாசிக்குடா பொறுப்பாளர் எம்.எச்.மாகிர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.யசோதரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM