12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம் பொய் சொல்வார்கள்

Published By: Ponmalar

27 May, 2023 | 11:40 AM
image

எல்லோருமே பொய் சொல்கிறோம். 

எவ்வளவு பொய் சொல்கிறோம்? 

எதற்காகப் பொய் சொல்கிறோம்? 

என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது. அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய் சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது. ஜாதகப்படி எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என்று அறிந்து கொள்ளலாம். 

மேஷம்: இவர்கள் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் எரிமலை குழியில் அமர்ந்திருப்பது போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கான கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் கோபத்தை மறைப்பதற்காகவே அமைதியாக இருக்கிறேன் என்று பொய் கூறுவார்கள். 

ரிஷபம்: இவர்களை காளை அல்லது கருப்பு குதிரை என்று கூறலாம். இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். தங்களுக்கு பிடித்த நபர், பொருள், அல்லது ஏதேனும் ஒரு விஷயம் மற்றவர்களிடம் இருந்தால் அதனைக் கண்டு பொறாமைப்படுவார்கள். இவர்கள் பொறாமைபடுவது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அசடு வழிந்து பொய் கூறுவார்கள். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகக் கூடியவர்கள். சில சமயங்களில் அமைதியாக இருப்பது போலவும், வெட்கப் படுவது போலவும் பொய் கூறுவார்கள். 

கடகம்: இவர்கள் அதிகம் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். எனவே மற்றவர்களினால் இவர்கள் மனது எளிதில் காயமடையும். எனினும் அந்த வழியை மறைத்துக் கொண்டு நன்றாக இருப்பதாக சொல்லி பொய் கூறுவார்கள். 

சிம்மம்: இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பொழுது அது தெரியாதது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் வேதனைப்படும் நேரங்களில் அதனை வெளிக்காட்டாமல் பொய் கூறுவார்கள். 

கன்னி: இவர்கள் தங்களது வாழ்வில் எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் செய்வார்கள். பரிபூரணமானவர்களாக திகழ்வார்கள். மற்றவர்களிடம் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள், ஏதேனும் ஒரு விஷயம் தங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொய் கூறுவார்கள். 

துலாம்: இவர்கள் பல நேரங்களில் செய்ய முடியாத விஷயம் என்று தெரிந்த போதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் யாரேனும் வயதானவர்கள் இவர்களிடம் சிக்கினால் இன்னும் அதிகமான பொய்களை கூறுவார்கள். 

விருச்சிகம்: இவர்கள் மிகவும் மர்மமானவர்கள். எளிதில் மற்றவர்களுடன் பழகக்கூடிய இவர்கள் தங்களின் வாழ்க்கை நிலையை வெளியில் கூறாமல் பொய்யாக நடிப்பார்கள். பல நேரங்களில் தனக்கு என்ன தேவையோ அதற்காக மட்டும் பொய்யாக நடிப்பார்கள். 

தனுசு: இவர்கள் யாருடைய உணர்வு, மரியாதை இவை எதையும் பொருட்படுத்தாமல் பொய் கூறுவார்கள். தங்களை மிகவும் ஆளுமை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இவர்கள் எப்பொழுதும் பல காரியங்களுக்காக மற்றவர்களுடன் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொய் கூறுவார்கள். 

மகரம்: மகர ராசியினர் மிகவும் வலிமையானவர்கள். எனினும் இவர்களால் எல்லா காரியங்களையும் தனியாக செய்து முடிக்க முடியாது. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் எந்த உதவியும் கேட்க மாட்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய பெருமைப்படுகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மற்றவர்களிடம் உதவி கேட்காமல் தவித்துக் கொண்டு பொய் கூறுவார்கள். 

கும்பம்: இவர்களின் எண்ணம் மற்றும் சுவை சற்று வித்தியாசமாகவே இருக்கும். பலருக்கும் புதுமையான விஷயங்களை கையாளுவதில் சற்று பயம் இருக்கும். ஆனால் இவர்களோ தனக்கு எந்த பயமும் இல்லை என்று அதனை செய்யத் தொடங்கி,தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த விஷயத்தை செய்து முடித்தேன் என்று பொய் கூறுவார்கள். 

மீனம்: மகர ராசியினர் போல் இவர்களும் உதவி கேட்க தயக்கம் காட்டுவார்கள். இருப்பினும் தன்னிடம் அனைத்து விஷயங்கள் இருந்தும் மற்றவர்களிடம் வெறும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக சொல்லி, தங்கள் காரியத்தை முடித்துக் கொள்வார்கள். இவ்வாறு நேரடியாக உதவி என கேட்காமல் பொய் கூறுவார்கள். 

-மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை பலன்களும் அனைவருக்கும் பொதுப்படையாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு தனி நபருடைய ஜாதகம், பிறந்த தேதி, நேரத்தை பொறுத்து இவை சற்று மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விநாயகரின் ஆறுபடை வீடு

2023-09-27 15:34:39
news-image

உங்களது திட்டத்தை வெற்றி பெற வைக்கும்...

2023-09-26 17:16:19
news-image

குலதெய்வத்தின் அருளை முறையாக பெறுவது எப்படி..?

2023-09-25 12:55:48
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய பரிகாரங்கள்...!

2023-09-23 16:20:50
news-image

பண வரவில் ஏற்பட்ட திடீர் தடையை...

2023-09-22 13:03:41
news-image

அளவில்லா தன வரவை விரும்புபவர்கள் மேற்கொள்ள...

2023-09-21 13:47:46
news-image

உங்களுடைய தொழிலின் மாய தடை நீங்கி,...

2023-09-19 17:21:36
news-image

யார் எப்போது மொட்டை அடித்துக் கொள்ளலாம்...?

2023-09-18 14:22:04
news-image

சேமிப்பிற்கு வழிவகுக்கும் மதுவனேஸ்வரர்

2023-09-16 20:22:53
news-image

செல்வ வளத்தை உயர்த்தும் எளிய வழிமுறை...!

2023-09-14 21:04:59
news-image

இறந்தவர்களை தூற்றலாமா...?

2023-09-12 14:04:32
news-image

வீட்டில் ஐஸ்வர்யத்தை வரவழைப்பதற்கான எளிய பரிகாரங்கள்

2023-09-09 17:17:07