புதிய வெளிநாட்டு வர்த்தகங்கள் ஈர்க்கப்படும் - ஜப்பான் அரச தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு

Published By: Vishnu

26 May, 2023 | 09:04 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை ஈர்ப்பதற்கான இலங்கையின்  அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

'இலங்கை பொருளாதாரத்தின்  மீள்  கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ்  இடம்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தூதரகம் ஆகியன இணைந்து  மேற்படி மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் திறந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை  ஈர்ப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் என்பன தொடர்பிலும்  ஜனாதிபதியால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின்  பொருளாதாரத்தை  ஸ்திரப்படுத்தல் மற்றும்  திறந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை ஈர்ப்பதற்கான  இலங்கையின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தகச்  செயற்பாடுகளில் இலங்கைக்கு அத்தியாவசியமான நட்பு நாடாக ஜப்பான் விளங்குவதாகவும், இருநாட்டு உறவுகளையும் பலப்படுத்திக்கொள்வதால் பல்வேறு பயன்களை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  அமைவிடம் மற்றும் திறன் விருத்திமிக்க தொழிற்படையின் காரணமாக ஜப்பானிய நிறுவனங்கள் வலயத்துக்குள் தங்களது முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கதவுகள் திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதே வேளை ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 20ஆவது  ஆண்டு பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அதன் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்கு தொழில் முயற்சியாளர்களின் உலகளாவிய சம்மேளனம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் உள்ளக தொடர்பாடல்களை  வலுப்படுத்தல்  என்பனவே  மேற்படி சந்திப்பின் நோக்கமாகும்.

வியட்நாம் பிரதி பிரதமர் ட்ரான் லூ குவாங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் வியட்நாமில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஜப்பானிய டிஜிட்டல் மயமாக்கல்  அமைச்சர்  டாரோ கோனோ   ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்  போது  டிஜிட்டல் மயமாக்கல்  செயற்பாடுகளுக்கான முனைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்ததோடு, டிஜிட்டல் முறைமைக்கு  மாறுவதற்கான  வேலைத் திட்டங்களின் போது இரு நாடுகளினதும் தொடர்புளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில்  அவதானம்  செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் திறந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை  ஈர்ப்பதற்கான  இலங்கையின்  அர்ப்பணிப்பான செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தகச்  செயற்பாடுகளில் இலங்கைக்கு அத்தியாவசியமான நட்பு நாடாக ஜப்பான் விளங்குவதாகவும், இருநாட்டு உறவுகளையும் பலப்படுத்திக்கொள்வதால் பல்வேறு பயன்களை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை - ஜப்பான்  பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்துடனான சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40