மலையக சமூக செயற்பாட்டாளரும் வர்த்தகருமான முத்துவேல் மணிமுத்துவின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அஸ்கிரிய மகா விஹார பிரிவெனயில், பன்வில பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களு மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்த 19ஆவது வருட நிகழ்வில் மல்வத்த, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களோடு 100 தேரர்களோடு இலங்கைக்கான இந்திய இணை தூதுவரும் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது நிகழ்வில் பங்கேற்ற மத குருமாருக்கு மணிமுத்து தானம் வழங்கினார்.
இந்திய வம்சாவளியான மலையக மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து 200 வருட பூர்த்தியை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், மலையக சமூகத்தை சேர்ந்த மு. மணிமுத்து வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குவதோடு, 'மால்போ டிரேடிங் கம்பனி' என்ற ஸ்தாபனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அத்துடன், சமூகத்துக்கு பல நற்பணிகளை செய்துவருகிறார்.
அவர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் எல்லா பிரதேசங்களிலும் செறிந்து வாழ்கின்றனர்.
மலைநாட்டின் மத்திய நகரமான கண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற தலதா மாளிகையை தரிசித்து, மத குருமாருக்கு தானம் வழங்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
மதம் என்பது இதயபூர்வமானதாக இருக்க வேண்டும். இலங்கை தாய்நாட்டில் அனைவரும் ஒன்றாகக் கூடி வாழ்ந்து, ஒரே பாதையில் பயணித்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும் என்பதே தனது அவா என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM