வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

Published By: Ponmalar

26 May, 2023 | 06:10 PM
image

இன்றைய திகதியில் 26 நபர்களில் ஒருவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

வலிப்பு நோய்க்கு கடந்த காலங்களை விட தற்போது 20க்கும் மேற்பட்ட நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகளும், சத்திர சிகிச்சைகளும் அறிமுகமாகி இருக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, ஆண் - பெண் என பாலின பேதமின்றி, வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மூளையின் இயங்கு திறனின் ஏற்படும் தடைகளால் தான் இத்தகைய நோய் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் அவதானித்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த நோய் பாதிப்பு பல தருணங்களில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. அதே தருணத்தில் வலிப்பு நோயின் தாக்கங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. சிலர் இதன் போது மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் இத்தகைய பாதிப்பின் போது நிச்சலனமாக ..நிலை குத்திய பார்வையுடன் இருக்கிறார்கள்.

சிலருக்கு சில தருணங்களில் கை மற்றும் கால் உறுப்புகளில் வலிப்பு பாதிப்பு ஏற்படும். ஆனால் இதன் காரணமாகவே வலிப்பு நோய் இருக்கிறது என்பது பொருள் அல்ல. 24 மணி தியாலத்திற்குள்... குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்.... இரண்டுக்கும் மேற்பட்ட முறையில் தூண்டப்படாத வலிப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே, உங்களுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

இத்தகைய வலிப்பு நோய் பாதிப்பிற்குள்ளாகுபவர்களில் 70 சதவீதத்தினருக்கு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் முழுமையாக நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை தொடர்ச்சியாக மருந்து மற்றும் மாத்திரைகளை பாவிக்க வேண்டும். மீதமுள்ள 30 சதவீதத்தினருக்கு சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் எம்மில் பலரும் வலிப்பு நோய் பாதிப்பு இருந்தால் மருந்துகளின் மூலமாகவே நிவாரணம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். சிலருக்கு மருந்துகளின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்காவிட்டால், அவர்கள் மருத்துவர்களை ஆலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, இதற்கான பிரத்யேக நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் வலிப்பு நோய்!

2023-05-31 11:39:46
news-image

வெப்ப பக்கவாத பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2023-05-30 12:26:34
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24