அமெரிக்காவில் நடந்த மீன்பிடி போட்டியொன்றில் தாம் பிடித்த மீன்களின் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காக, மீன்களின் உடலுக்குள் பொருட்களைத் திணித்து மோசடி செய்த இருவருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வா மாநிலத்தைச் சேர்ந்த ஜேக்கப் ருன்யன், சேஸ் கொமின்ஸ்கி ஆகியோருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஒஹையோ மாநலத்தின் ஏரியொன்றில் நடைபெற்ற மீன்பிடி போட்டியொன்றில் இவர்கள் மோசடி செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டது.
இவர்கள் சமர்ப்பித்த மீன்களின் அளவுடன் ஒப்பிடும்போது அவற்றின் எடை மிக அதிகமாக இருப்பதாக இப்போட்டியின் பணிப்பாளர் ஜேசன் பிஷ்சர் கருதினார்.
இதனால் மீன்களை வெட்டிய போது, மீன்களுக்குள் தலா 12 அவுன்ஸ் அளவுடைய 8 உலோகங்களும் தலா 8 அவுன்ஸ் அளவுடைய 2 உலோகங்களும் காணப்பட்டன.
அதையடுத்து இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் வெற்றிபெற்றிருந்தால் 28,760 டொலர் பரிசை பெற்றிருப்பர்.
ஆனால், பொலிஸார் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டதுடன், ஒஹையோ இயற்கை வளங்கள் திணைக்களத்தினால் விசாரணை நடத்ப்பட்டது.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் தாம் குற்றவாளிகள் என ஜேக்கப் ருன்யனும், சேஸ் கொமின்ஸ்கியும் ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து, இருவருக்கும் தலா 10 நாட்கள் சிறைத்தண்டனையும் 2500 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இப்போட்டியின்போது இவர்கள் பயன்படுத்திய 130,000 டொலர் பெறுமதியான படகு ஏற்கெனவே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ருன்யன், கொமின்ஸ்கி; மீன்பிடி அனுமதிப்பத்திரம் 3 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மீன்பிடி போட்டிகளில் பல்லாயிரக்கணக்கான டொலர் பணப்பரிசு வழங்கப்படும் நிலையில், இவர்கள் பல தடவைகள் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என என வழக்குத்தொடுநர் மைக்கல் ஓ'மலே கூறியிருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM