logo

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்' கமல்ஹாசன்

Published By: Ponmalar

26 May, 2023 | 06:18 PM
image

'உலக நாயகன்' கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.

23 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் உள்ள யெஸ் தீவில்  மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் இந்திய அளவில் திரையுலக முன்னேற்றத்திற்கூ சேவையாற்றியதற்காக உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் பொலிவூட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்குபற்றுகிறார்கள். இவர்களை தவிர தென்னிந்திய நட்சத்திர பிரபலங்களும் அதிதியாக பங்குபற்றுகிறார்கள்.

இதனிடையே இவ்விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் வருகை தருவாரா? தரமாட்டாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இவர் தற்போது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் பிரத்யேகத் தோற்றத்தில் நடித்து வருகிறார். இதன் காரணமாகவே அண்மையில் மறைந்த அவருடைய நெருங்கிய நண்பரான சரத்பாபுவின் இறுதி சடங்கு நிகழ்வுகளில் பங்கு பற்றவில்லை.

இதனால் இந்நிகழ்விலும் அவர் பங்குபெற்ற மாட்டார் என்றும், அவர் சார்பில் அவரது மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் அந்த விருதை பெறுவார் என்றும் ஒரு பிரிவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right