மருந்து தட்டுப்பாடு மிகவும் நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது - மருத்துவ அமைப்புகள்

Published By: Rajeeban

26 May, 2023 | 04:19 PM
image

நாட்டில் மருந்துதட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் மருத்துவ அமைப்புகள் அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளன.

அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என  இலங்கை மருத்துவசங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மருத்துவநிலையங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள  அவர் மேலும் மருந்துகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதால் நோயாளர்கள் சிலர் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுபெரும் பிரச்சினை இதற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தஒன்றரை வருடங்களாக இந்த நிலை காணப்படுகின்றதுஆனால் அரசாங்கம் இந்த விடயத்தின் பாரதூரதன்மையை கருத்தில் கொள்ளவில்லை என வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு உதவிவழங்கும் சமூகத்தினர் மருந்துகளை வழங்கும் நடவடிக்கையும் பல காரணங்களால்  பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிநிவாரணிகள் நீரிழிவிற்கான மருந்துகள் புற்றுநோயாளிகளிற்கான மருந்துகள் உட்பட 120 மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அரசதனியார் மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றது, மேலும் சத்திரசிகிச்சை ஆய்வுகூடசாதனங்களிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளியோம்...

2023-05-31 20:32:23
news-image

அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை...

2023-05-31 20:15:25
news-image

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2023-05-31 20:34:12
news-image

வெளியானது அதி விசேட வர்த்தமானி !

2023-05-31 22:13:35
news-image

எரிபொருள் விலையில் மாற்றம் - விலை...

2023-05-31 22:02:03
news-image

இராணுவ போர் தளபாட தொழிற்சாலையை மேம்படுத்த...

2023-05-31 17:26:48
news-image

பிரதமர் தினேஷ் குணவர்தன - தாய்லாந்து...

2023-05-31 20:33:16
news-image

நடாஷா எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையின் பழைய...

2023-05-31 20:35:44
news-image

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களையோ...

2023-05-31 16:26:40
news-image

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின்...

2023-05-31 20:25:17
news-image

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நீதி அமைச்சரின்...

2023-05-31 20:28:49
news-image

நடாசாவிவகாரம் - யூடியுப் உரிமையாளர் கைது

2023-05-31 19:57:49