இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

Published By: Ponmalar

26 May, 2023 | 06:19 PM
image

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னையில் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.

ஏராளமான திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய சதீஷ், முதன்முறையாக திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

பெயரிடப்படாத அந்த திரைப்படத்தில் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

ஹரிஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இளைய தலைமுறையினரின் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான ராகுல் தயாரிக்கிறார்.

இதனிடையே நடிகர் கவின், 'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய சம்பளத்தை இந்திய மதிப்பில் இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தியதாகவும், இந்த ஊதியத்தை தரும் தயாரிப்பாளருக்கு மட்டுமே கால்ஷீட் அளிக்க தயாராக இருப்பதாகவும், கவினின் இந்த நிபந்தனைக்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்ததால், இப்படத்தின் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்