(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் முன்னணி 4 கோல்ப் கழகங்களுக்கு இடையிலான கோல்ப் கிண்ணப் போட்டியில் மொத்தமாக 325 புள்ளிகளை பெற்றுக்கொண்ட விமானப்படையின் 'சீ ஈகிள்ஸ் கோல்ப் லிங்க்ஸ்' கோல்ப் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.
திருகோணமலை, 'சைனா ஹார்பர்' இலங்கை விமான படையின் ஈகிள்ஸ் கோல்ப் லிங்க்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில், ரோயல் கொலம்போ கோல்ப் கழகம், ஈகிள்ஸ் கோல்ப் லிங்க்ஸ், விக்டோரியா கோல்ப் கழகம், நுவரெலியா கோல்ப் கழகம் ஆகிய 4 கழக அணிகள் விளையாடின.
ஆண், பெண் இருபாலாருக்குமாக நடைபெற்ற இப்போட்டித் தொடரில், மொத்தமாக 325 புள்ளிகளைப் பெற்ற சீ ஈகிள்ஸ் கோல்ப் லிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் 'The Best Nearest Shot' கிண்ணத்தை 'ஈகிள்ஸ் கோல்ப் லிங்க்ஸ்' கழகத்தின் எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன வென்றெடுத்ததுடன், 'The Best Farthest Shot ' கிண்ணத்தை யை நுவரெலியா கோல்ப் கழகத்தின் மைக்கல் சதாசிவம் வென்றெடுத்தார்.
இதேவேளை, பெண்கள் பிரிவின் 'The Best Nearest Shot' கிண்ணத்தை நுவரெலியா கோல்ப் விளையாட்டுக் கழகத்தின் பிரன் டி மெல் கைப்பற்றியிருந்ததுடன், ரோயல் கொலம்போ கோல்ப் கழகத்தின் தினூக்கா பொரலஸ்ஸ 'The Best Farthest Shot' கிண்ணத்தை வென்றிருந்தார்.
போட்டித் தொடரின் ' The Male Best Scorer of the Tournament' விருதை ரோயல் கொலம்போ கோல்ப் கழகத்தின் ரவி லியனகே வென்றெடுத்ததுடன், The Female Best Scorer of the Tournament' விருதை விக்டோரியா கோல்ப் கழகத்தின் பிரவீனா துனுவில கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM