கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

Published By: Ponmalar

26 May, 2023 | 09:31 PM
image

தயாரிப்பு: ஒலிம்பியா மூவிஸ்

நடிகர்கள்: அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சரத் லோகித் சவா, ராஜசிம்மன் மற்றும் பலர்.

இயக்கம்: சை. கௌதம ராஜ்

மதிப்பீடு: 2.5 / 5

நடிகர் அருள்நிதி- 'டி பிளாக்', 'தேஜாவு', 'டைரி', 'திருவின் குரல்' என வரிசையாக வணிக ரீதியில் வெற்றி பெறாத திரைப்படத்தை வழங்கி, தன்னுடைய நட்சத்திர அந்தஸ்து குறித்து திரையுலகினர் கேள்வி எழுப்பிய நிலையில்… தொடர்ந்து திரில்லர் ஜேனரிலான திரைப்படங்களை தவிர்த்து விட்டு, முதன் முதலாக கிராமிய பின்னணியில் அதிரடி எக்சன் கலந்த கதையை தெரிவு செய்து, கழுவேத்தி மூர்க்கனாக நடித்திருக்கிறார். அதே தருணத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' எனும் திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சை. கௌதம ராஜ் இயக்கத்தில் 'கழுவேத்தி மூர்க்கன்' தயாராகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்துக் காண்போம்.

ராமநாதபுர மாவட்டத்தில் தெக்குப்பட்டி எனும் கிராமத்தில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். ஒரு சாதியை அழுத்தி, மற்றொரு சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்நிலையில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த பூமிநாதனும் ( சந்தோஷ் பிரதாப்), மூர்க்கசாமியும் ( அருள்நிதி) நண்பர்களாக உருவாகிறார்கள். அருள் நிதியின் தந்தைக்கு, மகனின் மாற்று  சமுதாயத்தை சேர்ந்த நட்பு பிடிக்கவில்லை. மேலும் அரசியலில் தோல்வி அடைந்த அவமானத்திலும் இருக்கிறார்.

மூர்க்க சாமி தன்னுடன் பாடசாலையில் பயின்ற கவிதாவை ( துஷாரா விஜயன்) காதலிக்க தொடங்குகிறான். இந்நிலையில் ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் ( ராஜசிம்மன்) தன் ஆதரவை நிரூபிப்பதற்காக தெக்குப்பட்டி  கிராமத்தில் போஸ்டர் அடித்து தலைவரை வரவேற்க திட்டமிடுகிறார். அவரது இந்த விடயத்திற்கு பூமிநாதன் தடையாக இருக்கிறார். இதனால் அவரிடமிருந்த பதவி பறிக்கப்படுகிறது. ஆத்திரம் அடைந்த மாவட்ட செயலாளர், பூமிநாதனை கொலை செய்து அந்த பழியை மூர்க்க சாமி மீது சுமத்துகிறார். மூர்க்க சாமி உண்மை தெரியாமல் தவிக்கிறார். பிறகு சட்டத்தரணியான உண்மை ( முனீஸ்காந்த்) எனும் கதாபாத்திரம் மூலம், உண்மையைத் தெரிந்து கொண்டு தன்னுடைய நண்பனின் மரணத்திற்கு காரணமானவர்களை கொடூரமாக பழிவாங்குகிறார். இதுதான் இப்படத்தின் திரைக்கதை.

அருள்நிதி -  அந்த மண்ணின் மைந்தர்களைப் போல் தோற்றத்தையும், உடல் மொழியையும் மாற்றி மூர்க்கசாமியாகவே திரையில் தோன்றி அசத்துகிறார். எக்சன் காட்சிகளில் அவர் காட்டும் அதிரடி வேகம்... தொடர்ந்து அவர் எக்சன் கதைகளை தெரிவு செய்து நடிக்கலாம் என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடத்தில் விதைக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் தடுமாறுகிறார். ஆனால் அந்தக் காட்சிகளில் அவருடன் நடித்த நடிகை துஷாரா விஜயன் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை அள்ளுகிறார். பூமிநாதனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப்- தன் கதாபாத்திரத்தை உணர்ந்து முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எதிர்பாராத சுவராசியமான திருப்பங்கள் இருப்பதால், ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. படத்தில் சில இடங்களில் வசனங்கள் கவனம் கவர்கின்றன. அதிலும் பூமிநாதனின் மரணத்திற்குப் பிறகு குறிப்பிட்ட சமுதாயத்திடம் அருள்நிதி பேசும் வசனங்கள் நச். சாதி அரசியலை பேசி இருப்பதால் அண்மையில் வெளியான பல திரைப்படங்களின் சில காட்சிகள் நினைவுக்கு வந்து செல்கின்றன. 'செந்தாமரை..' எனும் பாடல், டி. இமானின் ஃபேவரைட்டான மெலோடி... ரசிக்க வைக்கிறது. 'எல்லா அரசியல் மற்றும் ஜாதி கலவரத்தின் பின்னணியில்.. யாரோ ஒருவரின் சுயநலம் கலந்த பகை இருக்கும்' என காவல்துறை உயரதிகாரி ஒருவரின் அவதானிப்பு, யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவாளரும், கலை இயக்குநரும் இயக்குநரின் எண்ணத்திற்கு பக்க பலமாக செயல்பட்டிருக்கிறார்கள். பாடல் காட்சிகளுக்கான மாண்டேஜஸ் ஷாட்டில் தன் திறமையை காட்டிய படத்தொகுப்பாளர், எக்சன் காட்சிகளிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்களை விட பின்னணி இசையில் தன் வழக்கமான ஆதிக்கத்தை செலுத்தி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் டி. இமான்.

நட்பு, காதல், சென்டிமெண்ட், எக்சன், பாடல்கள்... என அனைத்து கொமர்ஷல் அம்சங்களும் இடம்பெற்றிருந்தாலும்... யூகிக்கக்கூடிய திரைக்கதை, வலிந்து திணிக்கப்பட்ட உச்சகட்ட காட்சி என சில விடயங்களும் இடம்பெற்றிருப்பதால்.. 'கழுவேத்தி மூர்க்கன்' மனதிற்குள் வர மறுக்கிறார்.

கழுவேத்தி மூர்க்கன்- சாதி தலைவன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42
news-image

இயக்குநர் பேரரசு வெளியிட்ட 'ஐமா' திரைப்பட...

2023-09-22 16:15:49
news-image

பான் இந்திய படத்தில் நடிக்கும் செல்வராகவன்

2023-09-22 16:03:50
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின்...

2023-09-22 16:03:05
news-image

அவளுடன் நானும் இறந்துவிட்டேன் : மகள்...

2023-09-22 13:46:40
news-image

எமி ஜாக்சனின் புதிய தோற்றம்

2023-09-21 14:42:31
news-image

தளபதி விஜயின் 'லியோ'- தமிழுக்கான பதாகை...

2023-09-21 15:38:45
news-image

விதார்த் நடிக்கும் 'டெவில்' திரைப்படத்தின் இரண்டாவது...

2023-09-21 13:48:46