'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நட்சத்திர நடிகரான சிலம்பரசன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில், சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே நடிகர் சிலம்பரசன், 'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பதும், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM