சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்று தற்போது நிர்க்கதியாகியுள்ள தனது மனைவியை நாட்டுக்கு அழைத்து வர உதவுமாறு நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்த, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காத நிலையில் தனது மனைவி அங்கு சிரமப்படுவதாகவும் அவரை நாட்டுக்கு அழைத்து வருமாறும் கொஹெம்ப, திகன, செல்லகதிர்காம பகுதியில் வசிக்கும் குறித்த கணவன் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக எனது மனைவி
கடந்த மாதம் (ஏப்ரல்) கொழும்பில் உள்ள முகவர் நிறுவனமொன்றின் உதவியுடன் சவூதி அரேபியா சென்ற போதும் அங்கு வேலை கிடைக்கவில்லை.
அவர் தற்போது சவுதி அரேபியாவின் முகவர் நிறுவனத்துக்கு சொந்தமான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் சுமார் 10 பெண்கள் இருப்பதாகவும், தம்மை விரைவில் காப்பாற்றுமாறும் எனது மனைவி செய்தி அனுப்பியுள்ளார் என அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், வெளிநாட்டுக்கு சென்று வீடு கட்ட பணம் அனுப்புவதாக தனது மனைவி கூறி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM