கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு திருவிழாவை நடத்துவதற்காக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் ஒரு மில்லியன் 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கச்சதீவு திருவிழாவுக்கான செலவு விபரங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்துக்கு இரு மாதங்கள் கழித்து, மாவட்ட செயலகம் பதில் அளித்துள்ளது.
அதில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ள செலவு விபரங்களாவன:
கச்சதீவு திருவிழாவுக்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் ஒரு மில்லியன் 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அந்த நிதியில் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு ஒரு மில்லியன் ரூபாயும், யாழ். மாவட்டச் செயலகத்துக்கு 2 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் உற்சவத்துக்கு தேவையான பொருட்கள், குடிநீர்த்தாங்கி மற்றும் தளபாடங்களை மாவட்ட செயலகம் மற்றும் ஊர்காவற்துறை, வேலணை பிரதேச செயலகங்களிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டு செல்வதற்கும், அவற்றை திருவிழா முடிவடைந்ததும் மீள உரிய இடங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்குமான எரிபொருட்செலவு, கச்சதீவு திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்களுக்கான ஒழுங்கமைப்புச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
மேலும், நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய்க்கான செலவுகளாக உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், எரிபொருள், மின்பிறப்பாக்கி, சுத்திகரிப்பு பணியாளர் சம்பளம், படகுக் கட்டணம், நீர்ப்பம்பிச் செலவுகள் உள்ளடங்குகின்றன.
2023.02.25 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கச்சதீவு திருவிழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்துகொள்வதனால் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்பு செய்வதாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட செலவு விபரங்களின் நிதிக்கோரிக்கை விபரம் யாழ். இந்திய துணைத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை இடம்பெற்ற கச்சதீவு திருவிழா தொடர்பில் உரிய ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் திருவிழா முடிவுற்ற மறுநாளே ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒதுக்கப்பட்ட நிதியின் யாழ். செலவு விபரங்கள் மாவட்ட செயலகத்தால் விரிவாக தரப்படாத நிலையில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் செலவு விபரங்களை நெடுந்தீவு பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM