சிரியாவில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் சுமார் 40 இற்க்கும் மேற்பட்ட ஜிஹாதிஸ்ட் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படும்,  பெடே அல்-ஷாம் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறிவைத்து, வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டஜிஹாதிஸ்ட் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் அறிக்கை விடுத்துள்ளது. 

மேலும் வடமேற்கு அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது பற்றிய தரவுகள் வெளியாகவில்லை. என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. 

சிரியாவின் ஜிஹாதிஸ்ட் தீவிரவாத அமைப்பை சேர்ந்த பெடே அல்-ஷாம் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர், ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் சார்பான ஆதரவு படைகள் மற்றும் ரஷ்ய கூட்டணி படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.