மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் எதிர் கொள்ளும் மனநல நீதியான பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொகுப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டிமேலிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சமூக செயற்பாட்டாளர் பேதுரு பெனடிக்ற் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆய்வு தொகுப்பின் இறுதி வடிவம் மேற்படி வைபவ ரீதியாக வெள்ளிக்கிமை (26) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு தொகுப்பில் மாவட்ட ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை சார் வன்முறைகள் தொடர்பிலும் பால்நிலை வன் முறைகள் தடுப்பு தொடர்பில் கையாளப்பட வேண்டிய அணுகுமுறை தொடர்பிலும் அறிக்கை இடப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தின் புராதன இடங்கள் மற்றும் மாவட்டத்தில் வழக்கொழிந்து செல்லும் பாரம்பரிய தொழில் முறைகள் தொடர்பிலும் பல வகையான தரவுகள் குறித்த ஆய்வு கையேட்டில் உள்ளடக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM