பூசானில் நடைபெற்ற 2வது வெளிநாட்டு ஊடகவியலாளர் மாநாடு

Published By: Vishnu

26 May, 2023 | 03:53 PM
image

தென் கொரியாவின் கூக்ஜே டெய்லி நியூஸ் பத்திரிகை நிறுவனம் மற்றும் ஆசிய ஊடகவியலாளர் சங்கம் இணைந்து நடத்தும் '2030 பூசன் வேர்ல்ட் எக்ஸ்போ' என்ற உலக கண்காட்சியை மையப்படுத்திய 2வது வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான மாநாடு இடம்பெற்றது.

பூசன் மெட்ரோபாலிட்டன் நகராட்சியின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பூசான்  நகரை ஒரு உலகளாவிய நகரத்தின் அடையளமாக மேம்படுத்தும் தீர்மானனமும் அதற்கான திட்டங்களும் பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதே வேளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை வரவழைத்து, சர்வதேச ஊடகவியலாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. அப்போது, 2030ஆம் ஆண்டு பூசன் எக்ஸ்போ நடைபெற உள்ள நோர்த் போர்ட் பகுதிக்கு சென்ற பத்திரிகையாளர்கள், பூசான் என்ற உலகளாவிய நகரத்தை தங்கள் உள்ளூர் ஊடகங்களில் எடுத்துரைக்க ஒப்புதல் அளித்தனர்.

'2030 பூசன் வேர்ல்ட் எக்ஸ்போ'  நடத்தும் 2வது வெளிநாட்டு பத்திரிகையாளர் மாநாட்டில், பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு தொனிப்பொருட்களின் கீழ் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

ஊடகங்களுக்க அப்பால் இதில் 6 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பூசன் தொழிலாளர் உரிமை மையம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பூசன் அறக்கட்டளை ஆகியவற்றின் விளக்கக்காட்சியும்  ஒத்துழைப்புகளும் இந்த மாநாட்டிற்கு வழங்கப்பட்டது.

இதே வேளை, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டு ஊடக நிருபர்கள் பூசனின் உலகளாவிய திறன்களைப் வெளிப்படுத்தினர்.

மேலும் தி கூக்ஜே டெய்லி நியூஸ் ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பே ஜே-ஹான் கூறுகையில், '2030 பூசன் வேர்ல்ட் எக்ஸ்போவை நடத்துவதன் மூலம், கொரியாவில் பூசான் நகரின் நன்மைகளை வெளிநாடுகளில் பரப்புவதற்காக இந்த  மாநாட்டை திட்டமிட்டதாக கூறினார்.

அதே போன்று ஆசிய ஊடகவியலாளர் சங்கத்தின் நிறுவனர் தலைவரான லீ சாங்-கி, 'இந்த நிகழ்வின் மூலம், பல்வேறு நன்மைகள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52