இம்ரான் கானும் மனைவியும் வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் தடை

26 May, 2023 | 12:37 PM
image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரின் மனைவி ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நடந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டில், இம்ரான் கானின் பிரிஐ கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்ராhன் கான், அவரின் மனைவி புஷ்ரா பீபி ஆகியோரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன,

ஆனால், இத்தடைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், வெளிநாடு செல்லும் திட்டம் எதுவும் தன்னிடமில்லை எனவும் இம்ரான் கான் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right