தனது சகோதரனுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 13 வயது சிறுவன் ஒருவன் மீது பாண் ஏற்றிச் சென்ற சிறிய லொறியின் கதவு கழன்று வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரலகஹலந்த, வாதுவவை பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்ன ககன கவிந்த மெண்டிஸ் என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்பவராவார்.
வாதுவையிலிருந்து ஹபரலகஹலந்த நோக்கி தனது இளைய சகோதரனுடன் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, பாண் லொறி ஒன்றின் பக்கவாட்டு இரும்புக் கதவு கழன்று சிறுவனின் மார்பில் பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
லொறி சாரதி கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM