மீள் ஏற்றுமதி பொருட்களுக்கு 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடல் கட்டாயம் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 5

26 May, 2023 | 12:51 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

துறைமுகத்தில்  35 சதவீதம் பெறுமதி சேர் வரி அறவிடாமல் எந்த பொருட்களும் மீள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது. எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதியின் போது  முறையான பெறுமதி சேர்  வரி அறவிடப்படுவதில்லை என குறிப்பிட்டார்.இதற்கு பதிலளிக்கையில் நிதி  இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத  பெறுமதி சேர் வரி அறவிடப்படும்.

இந்த வரி கொள்கை முறையாக செயற்படுத்தப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய தகவல்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மீள் ஏற்றுமதி  செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதி கட்டமைப்பில்  ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் உரிய தரப்புக்களுடன்  பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12