(நெவில் அன்தனி)
இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பங்குபற்றுவது உறுதி இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் சார்பாக விளையாடிவந்த அவரது குதிக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இண்டியன் பீறீமியர் லீக் கிரிக்கெட்டில் இந்த வருடம் பிரகாசிக்கத் தவறிய வனிந்து ஹசரங்க, 9 போட்டிகளில் 8 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
ஆப்பகானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கு முன்பதாக நடைபெறவுள்ள இந்தத் தொடர் இலங்கைக்கு பலப் பரீட்சையாக அமையவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM