நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

Published By: Ponmalar

26 May, 2023 | 12:46 PM
image

எம்மில் பலரும் தங்களது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவர்.  அதனை பெரும்பாலும் பிறந்த ஆங்கில திகதியை முன்னிறுத்தியே கொண்டாடுவர்.  ஆனால் நீங்கள் பிறந்த திகதியைக் கொண்டாடும் முன் நீங்கள் பிறந்த கிழமையன்று உங்களின் பிறந்த நாளைக் கொண்டாடினால்,, பலன்கள் கிட்டும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனுடன் நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ... அந்த கிழமைக்குரிய விசேட குணம் உங்களிடம் இருக்கும். அதனை கண்டறிந்து, அதற்கு சக்தியை அளித்துக்கொண்டிருந்தால், கிழமைக்குரிய தேவதைகளும், தெய்வங்களும் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக அருள்புரிவார்கள். 

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள்:
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், ‘ஆதித்ய ஹிருதயம்’ பாராயணம் செய்வதால் ஆரோக்கியமான வாழ்வு  உண்டாகும். இளம் சிகப்பு மற்றும் ஒரேஞ்சு நிறத்தில் ஆடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் அணியலாம், இதனால் அன்றைய தினம் உங்களுக்கு சகல காரியங்களிலும் சாதகமான பலன்கள் கிட்டும். கிழக்கு திசை பலன் தருவதாக இருக்கும். அரசு வழிகளில் காரிய வெற்றி பெற. சூரிய ஹோரை காலத்தில் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள்:
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள், அதிகாலையில் (நான்கரை மணித்தியாலம் முதல் ஆறு மணித் தியாலம் வரை) தாயை வணங்கி, அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து, கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைத்து  வணங்கிய பின்னர் அதனை பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதமாக தருவது சிறப்பு. திங்கட் கிழமைகளில் சந்தன நிறம் அல்லது வெள்ளை வண்ணத்தில் ஆடைகள் அணிவது நன்மைகள் தரும்.

செவ்வாய்கிழமை பிறந்தவர்கள்:
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள், அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம் பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபட்டு, அதனை பிரசாதமாக மற்றவர்களுக்கு தருவது சிறப்பு. செவ்வாய் கிழமைகளில் சிவப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட ஆடைகளை அணிவது வெற்றிகளைத் தரும்.

புதன்கிழமை பிறந்தவர்கள்:
புதன்கிழமையில் பிறந்தவர்கள், அதிகாலையில் துளசி, கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மஹாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயிறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்ய வேண்டும். பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்களில் ஆடையை தெரிவு செய்து அணிவதால், நினைத்த காரியங்களில் நன்மைகளை உண்டாக்கும்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள்:
வியாழக்கிழமையன்று பிறந்தவர்கள், சூரிய உதயத்திற்கு முன்னர் ‘ஸ்ரீ தட்சிணா மூர்த்தி ஸ்லோகம்‘ அல்லது குரு காயத்ரியை பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக்கடலையை நைவேத்தியமாக படைத்து, அதனை பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதமாக தருவ்து சிறப்பு. வியாழக்கிழமைகளில் தங்கநிற ஆடைகளை அணிந்தால், அன்றைய தினம் முழுவதும் சாதகமான சூழல்கள் உருவாகும்.  வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் வரும் நாளில், வாழ்வில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால், ஆயுள் முழுவதும் நன்மைகளைத் தரும்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்:
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள், அதிகாலையில் மல்லிகைப் பூக்களால் ‘ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்லோகம்’, ‘ஸ்ரீலலிதா திரிசதி’ ஆகியவற்றை பாராயணம் செய்து, அம்பிகையை வழிபடலாம். வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது, வெற்றியைத் தரும், பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். வெள்ளியன்று வரக்கூடிய கக்ரஹோரையில் இவர்களுக்கு ஆன்மீக வெற்றிகளைத் தரக்கூடியது.

சனிக்கிழமை பிறந்தவர்கள்:
சனிக்கிழமையில் பிறந்தவர்கள், அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, குளித்து, நீல சங்குப் பூ மற்றும் வில்வம் சாற்றி, சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களைப் பயன்படுத்துவது பல நன்மைகளைத் தரும்.

பிறந்த திகதி தெரியாதவர்கள், பிறந்த ஆண்டு தெரியாதவர்கள் மேற்கூறிய ஒவ்வொரு கிழமைகளில் மேற்கொள்ளக்கூடிய விடயத்தை பின்பற்றினால்.. அதில் உங்களுக்கு தொடர் வெற்றியை அளிக்கும் கிழமை, ஆடையின் வண்ணத்தை அறிந்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து உங்களின் வெற்றிக்கான விடயத்தையும் துல்லியமாக அவதானிக்கலாம். 

தொகுப்பு சுபயோகதாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க...

2023-05-31 12:49:27
news-image

கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2023-05-30 11:57:42
news-image

12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம்...

2023-05-27 11:40:57
news-image

நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

2023-05-26 12:46:01
news-image

சாபங்களுக்கு பரிகாரங்கள் இருக்கிறதா..?

2023-05-24 15:01:26
news-image

உங்களது பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மயிலிறகு!

2023-05-23 13:33:51
news-image

கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான...

2023-05-22 13:10:39
news-image

குரு பகவான் பயோடேட்டா

2023-05-20 14:01:08
news-image

கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் +...

2023-05-16 15:33:52
news-image

கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

2023-05-16 11:06:51
news-image

எந்தெந்த ராசியினருடன் சேர்ந்தால் அதிர்ஷ்டம் கிட்டும்?

2023-05-15 16:56:34
news-image

தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

2023-05-15 11:47:23