ஆண்டுதோறும் உலகம் முழுவதும் தோராயமாக ஐந்து லட்சம் புதிய கணைய புற்று நோயாளிகள் உருவாகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக கணைய புற்றுநோய் பாதிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் இத்தகைய புற்றுநோயை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதில் தற்போது ரொபாடிக் எனும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி பலனளித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கணையம் எனும் எம்முடைய உடலின் வயிற்றுப் பகுதிக்கு பின் பகுதியில் அமைந்திருக்கும் உறுப்பு. செரிமானத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்வதுடன், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹோர்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.
இந்த கணையத்தின் திசுக்களில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டால், அதனை கணைய புற்றுநோய் என மருத்துவர்கள் வரையறுக்கிறார்கள். கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இங்கு ஏற்படும் புற்றுநோய் மற்றொரு உறுப்பிற்கு பரவிய பிறகு இது அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் முதுகில் பரவும் வயிற்று வலி, பசியின்மை, திடீரென்று எடை இழப்பு, மலம் மற்றும் சிறுநீரின் நிறமாற்றம், தோலரிப்பு, நீரிழிவு கட்டுப்படுத்த இயலாத நிலை, அதீத சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
கணையம் எனும் உறுப்பின் தலைப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதனை தொடக்க நிலையில் பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்தால், அதனை சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றி தீர்வை தரலாம்.
சிலருக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, திசு பரிசோதனை, ரத்த பரிசோதனை போன்றவை அவசியப்படலாம். மேலும் சிலருக்கு இப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்த சத்திர சிகிச்சையுடன் கீமோதெரபி எனும் சிகிச்சையும் அளிக்க வேண்டியதிருக்கும்.
கணையம் எனும் உறுப்பு, வயிற்றின் பின் பகுதியில் அமைந்திருப்பதால் கடந்த தசாப்தங்களில் திறந்த நிலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் தற்போது லேப்ராஸ்கோப்பிக் எனும் நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நோயாளிகளின் இயல்பு நிலைக்கு திரும்பும் கால அவகாசம் குறைகிறது. தற்போது லேப்ராஸ்கோபிக் சிகிச்சையுடனான சத்திர சிகிச்சையின் போது முப்பரிமாண தொழில்நுட்பமும், ரொபாட்டிக் எனப்படும் இயந்திரத் தொழில்நுட்பமும் அறிமுகமிகி இருப்பதால் நல்ல பலனை வழங்கி வருகிறது.
டொக்டர் செந்தில்நாதன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM