சிட்னியில் இடம்பெற்ற பாரிய தீவிபத்திற்கு 13 வயது சிறுவர்களே காரணம்- பொலிஸார் அதிர்ச்சி தகவல்- நூற்றாண்டு கட்டிடம் முற்றாக தீக்கிரை

Published By: Rajeeban

26 May, 2023 | 12:08 PM
image

சிட்னியில் நேற்று இடம்பெற்ற பாரியதீவிபத்து தொடர்பில் 13 வயது சிறுவர்கள் இருவர் அவுஸ்திரேலிய காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சிட்னியில் நேற்று இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் பாராம்பரிய கட்டிடமான ஏழு தளங்களை கொண்ட கட்டிடமொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.ரன்டில் வீதியில் உள்ள  ஒரு நூற்றாண்டு பழமைவாய்ந்த முன்னைய ஹென்டர்சன் தெர்ப்பி தொழிற்சாலையே தீயினால் முற்றாக அழிந்துள்ளது.

தீமூண்டதும் அந்த கட்டிட பகுதியிலிருந்து பதின்மவயதினர் சிலர் ஒடியுள்ளனா என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

13வயது சிறுவர்கள் இருவர் வெவ்வேறு காவல்நிலையங்களில் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அவர்கள் விசாரணையில் உதவுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேகநபர்களும் 13 வயதானவர்களாகயிருக்கலாம் என காவல்துறை அதிகாரிதெரிவித்துள்ளார்.

நேற்யை தீவிபத்தை ஒருதசாப்தத்தில் ஏற்படும் விபத்து என  தீயணைப்பு மற்றும் மீட்புபிரிவின் ஆணையாளர் ஜெர்மி பியுட்ரெல் தெரிவித்துள்ளார்.

மிகவும் கடுமையாக காணப்பட்ட தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவுமுழுவதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,சில கட்டிடங்கள் இடிந்துவிழும்  ஆபத்து காணப்பட்டது என தீயணைப்பு பிரிவின் அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.

அதுவேகமாக அதிகரித்துவரும் தீயாக காணப்பட்டது கைவிடப்பட்ட கட்டிடம் பழைய மரங்கள் போன்றவை காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தீயினால் முற்றாக அழிந்துபோயுள்ள கட்டிடத்திற்குள் முதல்நாளிரவு 15 பேர்உறங்கியுள்ளனர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

அருகில் உள்ள கட்டிடங்கள் சிலவற்றிற்கு ஆபத்து காணப்பட்டது ஜன்னல்கள் விழுந்து நொருங்கின என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சுவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன அவை விழக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர்...

2023-05-28 13:32:40
news-image

ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் -...

2023-05-28 13:08:08
news-image

தலிபானின் தடையால் கல்வியை தொடரமுடியாமல் போன...

2023-05-28 12:26:16
news-image

பாக்கிஸ்தானை பூகம்பம் தாக்கியுள்ளது.

2023-05-28 11:58:17
news-image

தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் தொடங்கிய...

2023-05-28 11:04:29
news-image

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா...

2023-05-28 11:03:49
news-image

கார் - லொறி நேருக்கு நேர்...

2023-05-27 22:27:56
news-image

தந்தையுடன் நீச்சல் பழகச் சென்ற 2...

2023-05-27 22:23:10
news-image

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள்...

2023-05-27 11:54:20
news-image

பூசானில் நடைபெற்ற 2வது வெளிநாட்டு ஊடகவியலாளர்...

2023-05-26 15:53:11
news-image

இந்திய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை...

2023-05-26 12:50:15
news-image

எலிசபெத் மகாராணியை கொல்வதற்கு அமெரிக்காவில் இடம்பெற்ற...

2023-05-26 13:09:02