சவோனா 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுப்புன் 2 ஆம் இடம்

Published By: Vishnu

26 May, 2023 | 11:47 AM
image

(நெவில் அன்தனி)

இத்தாலி, சவோனா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2023 இன்டர்நெஷனல் மீட்டிங் சிட்டா' டி சவோனா மெய்வல்லுநர்  போட்டியில்   ( 2023 International Meeting Citta' Di Savona)  ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட  நிகழ்ச்சியில் இலங்கையின் யுப்புன் அபேகோனுக்கு 2ஆம் இடம் கிடைத்தது.

உலக மெய்வல்லுநர் கண்டங்களுக்கான டுவர் செலஞ்சர் அந்தஸ்தைக் கொண்ட போட்டியாக இது கருதப்படுகிறது.

தேற்காசியாவின் அதிவேக மனிதன் என அழைக்கப்படும் யுப்புன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.01 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்றார்.

இந்தப் போட்டியின்போது காற்றின் நேர்த்திசை வேகம் +2.7 ஆக இருந்தது.

ஜேர்மனியைச் சேர்ந்த ரீஸ் ப்ரெஸ்கோட் (9.94 செக்.) முதலாம் இடத்தையும் கொஸ்டா ரிக்கா வீரர் ஆத்தர் சிசே (10.03 செக்.) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியை 10.04 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் யுப்புன் அபேகோன் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தார்.

முதலாவது தகுதிகாண் போட்டியில் கானா வீரர் பெஞ்சமின் அஸாமெட்டி (9.99 செக்.) வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அவரால் 5ஆம் இடத்தையே பெற முடிந்தது.

சீனாவில் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கம் வென்றுகொடுக்கக்கூடியவர் என யுப்புன் அபேகோன் நம்பப்படுகிறார்.

இதேவேளை, நடப்பு மெய்வல்லுநர் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி தருவதாக அவர் கூறியுள்ளார்.

'எமது திட்டப்படி எல்லாம் நலமாக நிறைவேறிவருகிறது. எதிர்காலப் போட்டிகளில் இன்னும் சிறப்பான ஆற்றல்களை வெளிப்டுத்தி வெற்றிபெற முயற்சிப்பேன். ஆசிய விளையாட்டு விழாவும் உலக மெய்வல்லுநர் போட்டியுமே எமது பிரதான இலக்கு' என அவர் தெரிவித்துள்ளர்.

இத்தாலியின்  ஃப்ளோரென்ஸ் நகரில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள வண்டா டயமண்ட் லீக் போட்டி யுப்புன் பங்குபற்றவுள்ள அடுத்த சர்வதேச போட்டியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37