மலர்ந்துள்ள 2016 புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு இன்று காலை விஷேட புதுவருட ஆராதனை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் முன்னிலையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் ஆராதனைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மறைமாவட்ட ஆயரினால் புதுருடத்தையொட்டி சிறைக்கைதிகளுக்கு மதநற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் புதுவருட அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

சிறைக்கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.