இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீசபத்திரனவின் குடும்பத்தினரை இந்திய அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்எஸ்டோனி நேற்று சென்னையில்சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது டோனி மதீசபத்திரன குறித்து நீங்கள் கவலைப்படதேவையில்லை அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள லீலா பலஸ்ஹோட்டலில் டோனி மதீசபத்திரனவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்,இந்த ஹோட்டலிலேயே சென்னை அணியினர் தங்கியுள்ளனர்,
டோனியை சந்தித்த படங்களை மதீசபத்திரனவின் சகோதரி விசுக்கா பத்திரன இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
எம்எஸ்ஸின் ரசிகையான விசுக்கா இந்த சந்திப்பை நான் கனவுகண்டதிற்கு அப்பாற்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பேபி மலிங்க என அழைக்கப்படும் தனது சகோதரர் பாதுகாப்பான கரங்களில் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தல நீங்கள் மதீசவை பற்றி கவலைப்படத்தேவையில்லை அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என தெரிவித்துள்ளதால் தம்பி தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளார் என நாங்கள் உறுதியாக உள்ளோம் இது எனது கனவில் நான் கண்டதற்கு அப்பால் பட்ட தருணம் என அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM