நல்லூர் சிவன் ஆலய கொடியேற்றமும் நிருத்த உபசாரமும் 

Published By: Nanthini

26 May, 2023 | 11:21 AM
image

நல்லூர் சிவன் ஆலய அம்மன் வாசல் கொடியேற்ற வைபவம் நேற்று 25ஆம் திகதி காலை 7 மணியளவில் நடைபெற்றது. 

இக்கொடியேற்ற நிகழ்வின் சிறப்பம்சமாக, நவசந்தி பூஜைகளின்போது ஆகமங்களில் குறிப்பிடப்பட்டவாறு அந்தந்த சந்திகளில் அவற்றுக்குண்டான நிருத்த உபசாரமும் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட, நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், கலாநிதி பட்ட ஆய்வாளருமான சீதாலக்ஷ்மி பிரபாகரன், தனது ஆய்வின் பெறுபேறாக, ஆகமம் குறிப்பிட்டவாறு நிருத்த உபசாரத்தை ஆலயங்களில் இடம்பெறச் செய்வதற்கான ஒரு முன்முயற்சியாக, இந்த நிருத்த உபசாரத்தை நல்லூர் சிவன் ஆலய அம்மன் வாசல் மஹோற்சவ ஆரம்ப நாளாகிய நேற்றைய  கொடியேற்ற நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தார்.

சீதாலக்ஷ்மி பிரபாகரனது வழிகாட்டலில், நீர்வையூர் பொன் சக்தி கலாகேந்திரா இயக்குநரும் யாழ். பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான சத்தியப்பிரியா கஜேந்திரனின் நெறியாள்கையில், அவர்களது மாணவர்களால் இந்த நிருத்த உபசார ஆற்றுகை இடம்பெற்றது.

அத்தோடு, குரலிசையை பீடத்தின் இசைத்துறை விரிவுரையாளரான மதுராங்கி நிஷாந்தனும், மிருதங்க இசையை பீட நடனத்துறை மிருதங்க விரிவுரையாளரான கணபதிப்பிள்ளை கஜனும், வயலின் இசையை பீடத்தின் இசைத்துறை வருகை விரிவுரையாளரான இராசரட்ணம் நிரோஜனும் வழங்கியிருந்தனர்.  

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை கலைஞர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.  

இதேபோன்று நிருத்த உபசாரத்தை ஏனைய ஆலயங்களிலும் இனிவரும் காலங்களில் நடத்த இந்நிகழ்வு ஓர் ஆரம்பமாக அமைகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21