“உலக புகைத்தல் தடுப்பு தினம்”

26 May, 2023 | 11:25 AM
image

இம்முறை உலக சுகாதார ஸ்தாபனம், உலக புகைத்தல் தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாக “எமக்குத் தேவையானது உணவு, புகையிலை இல்லை” என்று பெயரிட்டுள்ளது. இந்தத் தொனிப்பொருளானது, உலகளாவிய ரீதியில் புகையிலை பயிர்ச் செய்கையில் ஈடுபடும் பயிர்ச்செய்கையாளர்களின் அவதானத்தை மாற்றுவழி உப பயிர்ச்செய்கையின் மீது செலுத்தி அவற்றை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சில முரண்பாடுகள், காலநிலை மாற்றம், கொவிட் - 19 தொற்று மற்றும் உயர்ந்து செல்லும் உணவு விலை போன்ற பல காரணங்களின் மூலம் ஏற்படுகின்ற உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு இதுவரை முழு உலகமும் முகங்கொடுத்துள்ளது. 

வரலாற்றில் குறிப்பிடப்படும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களுடன் இலங்கையில் இந்நிலமை மிகவும் தீவிரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கலுடன் விரைவாக உயர்ந்து செல்லும் உணவு விலைகளுடன் நாட்டு மக்கள் மிகவும் பொருளாதார இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 6.3 மில்லியன் இலங்கையர்கள் உணவு பாதுகாப்பின்மையை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த கஷ்டமான பொருளாதார நிலைக்கு மத்தியில் புகையிலை பாவனை காரணமாக எமது நாட்டில் பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின்மீது தேவையற்ற சுமையைச் ஏற்படுத்துகின்ற நிலை நிச்சயமாக தேவையற்ற ஒன்றாகும். 

சுகாதார அமைச்சின் கூற்றுப் படி, புகைப்பொருள் பாவனையினால்  இலங்கையில் வருடாந்தம் அநியாயமாக சுமார் 20,000 பேர் வரை மரணிக்கின்றனர். எமது நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணிப்பதற்குக் புகைத்தல் பாவனை காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கையர்கள் நாளாந்தம் ரூ.மி.400 இனை சிகரட்டுக்காக செலவிடுகின்றனர். சிகரட் பாவனை காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சுகாதார செலவுகள் ரூ.மி.84,320 ஆகும். புகைத்தல் பாவனையில் ஈடுபடும் அதிகமானோர் குறைவருமானம் ஈட்டுகின்ற குழுவினராகும் என்று ஆய்வுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆதலால், கஸ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தை வீணாக புகை பிடித்தலுக்காகச் செலவிடுவதால் அவர்களின் குடும்பங்கள் மேலும் படுகுழியில் தள்ளப்படுகின்றன. அவ்வாறான குடும்பங்களின் உணவு பாதுகாப்பிற்கும் புகைத்தல் பாவனை தடையாக அமைந்துள்ளது. 

தற்போதைய நிலவரங்களின்படி பொதுமக்களுக்கு உணவு தேவையே தவிர, புகையிலை இல்லை என்பதால், புகைபொருள் பாவனையிலிருந்து விடுபடுவதன் மூலம் உணவுப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக வீணாக புகைத்தலிற்கு செலவிடும் பணத்தை அத்தியாவசிய போசாக்குணவு பெறுவதற்காக செலவிடுவதற்கு அவதானத்தைச் செலுத்துதல் வேண்டும். 

மேலும், புகையிலையை பயிர்ச்செய்கையானது சூழல் மாசடைதற்கான பிரதான காரணியாக அமைவதுடன், புகையிலை பயிர்ச்செய்கை மூலம் ஏற்படும் பாதிப்புகளான கடுமையான மண்ணரிப்பு, மண்வளம் குன்றுதல் மற்றும் நீர்வளம் குறைதல் ஆகியவை காரணமாக  நிலத்தின் உற்பத்தித்திறனைக் குறைத்து அதிக இரசாயன உரப் பாவனை முழு சூழல் வலையமைப்பிற்கும், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த இரசாயனப் பொருட்களை விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் சுகாதார நிலைமைகளின்மீது பாரிய பாதிப்புக்களை தோற்றுவிக்கின்றன. 

புகையிலை மூலம் மண்வளம் விரைவாகக் குன்றுவதால், வளமான மண் அரிப்புக்குள்ளாகி, இறுதியில் அந்த மண் வேறு அத்தியாவசியமான பயிர்ச் செய்கைகளுக்குப் பொருத்தமற்ற நிலையை அடைகிறது. 

2017 ஆம் ஆண்டில் அப்போதைய சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன , இலங்கையில் 2021 ஆம் ஆண்டளவில் புகையிலை கட்டுப்படுத்தல் பற்றிய புகையிலை கட்டுப்பாட்டுக்கான சர்வதேச உடன்படிக்கையின்  (FCTC) 17 மற்றும் 18 வது சரத்துக்களின் பிரகாரம் புகையிலை பயிர்ச்செய்கையிலிருந்து வெளியேறுவதாக சர்வதேச மாநாட்டில் அறிவித்தார். இது புகையிலை பயிரச்செய்கையாளர்கள் மாற்றுவழி வாழ்வாதாரத்தில் ஈடுபடுவதற்காக சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 

எனினும் அந்த உடன்பாடு எட்டப்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையில் இத்தீர்மானம் இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை. அத்தோடு புகையிலை கைத்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றின் பின்புலத்தில் இருக்கின்ற செல்வாக்கு இதன் காரணியாக அமைந்துள்ளமை தெளிவு. 

புகையிலை கைத்தொழிற்றுறை பல்வேறு உபாயத்திட்டங்கள் ஊடாக கொள்கை வகுப்பாளர்களிடம் நெருங்கி, கொள்கைத் தீர்மானங்களைப் பலவீனப்படுத்துவதற்கும், புகையிலை பயிர்ச்செய்கையை முன்கொண்டு சென்று புகையிலை உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் தொடர்ச்சியாக இயங்குவது வெளிப்படையாகும். 

புகையிலைக் கைத்தொழில் விவசாயிகளின் வாழ்வாதார வழிமுறையாக அமைந்துள்ளது என்று அடிக்கடி தங்களைப்பற்றி புகழ் பேசிவந்தபோலும், ஒருபோதும் அவை உண்மையான அல்ல. புகையிலை பயிர்ச்செய்கை நிலைபேறானதொரு பயிர்ச்செய்கை என்று காண்பிப்பதற்காக புகையிலை தொழிற்றுறை மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப்போனது. 

அதேபோல சிகரட் பாவனை மற்றும் அதனுடன் இணைந்த பாதிப்புகளைக் குறைப்பதற்கான கட்டுப்பாட்டு கொள்கைகள் இப்பொழுது எமது நாட்டுக்குத் தேவையாகும். கலால் வரியை அதிகரிப்பதன் மூலம் சிகரட் உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதியுச்ச அளவில் அதிகரிப்பதானது புகையிலையை கட்டுப்படுத்தவதற்காக எடுக்கவேண்டிய மிகவும் பயனுள்ள உபாயத்திட்ட வழிமுறையாகும் என்று இனங்காணப்பட்டுள்ளது. 

எனினும், தற்பொழுது இலங்கையில் கலால் வரி நாட்டின் பணவீக்கத்துடன் இணைந்ததாக தயாரிக்கப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான விலைச் சுட்டி அமுல்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக எமது நாட்டில் கலால் வரி மற்றும் அதில் தொடர்ச்சியாக ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுகின்ற சிக்கலான, பின்தங்கிய முறைமைகளாகும்.  

நிதி அமைச்சின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்ற முறைகேடான செல்வாக்குகள் காரணமாக நாட்டினுள் விஞ்ஞானபூர்வமான மற்றும் தர்க்கரீதியான சிகரட் வரிக் கொள்கையொன்றை ஸ்தாபிப்பது தாமதமாகியுள்ளது. இந்த நிலைமையின்கீழ் கடந்த 5 வருடங்களில் அரசாங்கம் இழந்த வரி வருமானம் அண்ணளவாக ரூ.பி.200 வரையான தொகையாகும். 

இலங்கை புகையிலைக் கம்பனியின் பங்குகளில் 84.13% இற்கு உரிமைகோருகின்ற பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது எமது நாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட அந்தத் தொகையை இலாபமாக ஒன்றுதிரட்டியுள்ளது. இந்நிலைமையானது கஸ்டமான பொருளாதார நிலையிலிருக்கின்ற எமது நாட்டின் பணம் வெளிநாட்டிற்கு ஈர்க்கச் செய்து தொடர்ந்தும் எமது நாட்டை வறுமைக்குள் தள்ளப்படுவதற்கு காரணியாக அமைகின்றது.  

புகைபிடித்தல் பாவனை காரணமாக இடம்பெறுகின்ற பொருளாதார, சுகாதார மற்றும் சமூக ரீதியான பாதிப்பினைக் குறைப்பதற்காக அரசாங்கத்தின் கலால் வரி வருமானத்தை உயர்த்துவதற்கும், சரியான விலைச்சுட்டி ஊடாக நாட்டில் விஞ்ஞானபூர்வமான மற்றும் தர்க்கரீதியான மதுவரிக் கொள்கையொன்றை நிறுவக்கோரி சகல கொள்கைவகுப்பாளர்களுக்கும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்துகின்றது. 

அத்துடன், புகையிலை பயிர்ச்செய்கையிலிருந்து விடுபட்டு விவசாயிகள் பயனுள்ள வாழ்வாதார வழிமுறைகளில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் விரைவுபடுத்துவதற்கான காலம் எழுந்துள்ளது. இலங்கையினுள் புகையிலை பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயத்தை தொடர்ந்தும் முன்னேற்றி, போசாக்கான நிலைபேறான பயிர்ச்செய்கைகளின்மீது கவனத்தை செலுத்தி, இறக்குமதி உற்பத்திகள்மீது தங்கியிருக்காமல் தன்னிறைவான எதிர்காலத்திற்காகவேண்டி, ஒன்றிணையுமாறு பொறுப்புக்கூறுகின்ற தரப்பினர்களிடமும், சகல பிரஜைகளிடமும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொள்கின்றது. 

      

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27
news-image

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி

2023-09-24 19:53:55
news-image

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

2023-09-24 19:54:17
news-image

இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல்...

2023-09-24 15:36:36