கொழும்பு - 15 புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்துக்கு நன்கொடையாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடம் நேற்று 25ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு லயன்ஸ் இன்டர்நெஷனல் மாவட்ட 306 B2இன் ஆளுநர் லயன் கிரேடியன் பெர்னாண்டோவால் (PMJF PMAF) திறந்துவைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த திட்டம் கடந்த 2022 நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்துக்கு 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த 2 மாடிகளைக் கொண்ட வகுப்பறை கட்டடத்தை லயன்ஸ் கிளப் ஒஃப் கலம்போ சிட்டி நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதற்கான முழுமையான நன்கொடையை லயன் எஸ். புஸ்பராஜன் (PMJF PMAF) தனது மறைந்த தந்தை எஸ். சோமசுந்தரத்தின் நினைவாக வழங்கினார்.
இந்த வித்தியாலயத்துக்கு இது ஒரு முக்கிய விடயமாக காணப்படுகிறது.
இந்த பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரையிலான 552 மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 255 மாணவர்கள் ஆரம்ப கல்வியை கற்கின்றனர். மீதமான மாணவர்கள் தரம் 6 முதல் 11 வரை கல்வி கற்கின்றனர்.
ஏனைய தேசிய பாடசாலைகளுக்கு இணையான நவீன மற்றும் சிறந்த வசதிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் இலகுவாக கற்கும் சூழ்நிலையை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.
அத்துடன், பாடசாலையில் தரைத்தளம் மற்றும் முதலாம் மாடியில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்களுக்கு போதுமான இட வசதியை வழங்கும் நோக்குடன் இந்த கட்டட நிர்மாணம் இடம்பெற்றுள்ளது.
லயன்ஸ் ஒஃப் கலம்போ சிட்டி கழகத்தின் திட்டத் தலைவர் லயன் ஜோனி பெர்னாண்டோ, பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து இந்த வெற்றிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
வளங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதே கழகத்தின் முதன்மை இலக்காக காணப்படுகிறது.
இதன் மூலம் கழகத்தின் சமூக சேவையில் அர்ப்பணிப்பு மற்றும் லயன்ஸ் இன்டர்நெஷனல் டிஸ்ட்ரிக்ட் 306 B2இன் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
கொழும்பு நகரத்தின் லயன்ஸ் கிளப் கல்வி உள்கட்டமைப்பை ஆதரிக்கும் நீண்டகால பாரம்பரியம் இத்திட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM