மேற்கிந்திய வீரர் டெவோன் தோமஸ் ஐசிசியினால் இடைநிறுத்தம்

Published By: Sethu

26 May, 2023 | 09:55 AM
image

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டெவோன் தோமஸை, போட்­டி­க­ளி­லி­ருந்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இடை­நி­றுத்­தி­யுள்­ளது. லங்கா பிரீ­மியர் லீக் உட்­பட பல சுற்­றுப்­போட்­டி­களில் ஆட்­ட­நிர்­ணயம் செய்­வ­தற்கு முயன்­றமை உட்­பட பல ஊழல் குற்­றச்­சாட்­டுகள் தோம­ஸுக்கு எதி­ராக ஐசிசி பதி­வு­செய்­துள்ள நிலையில் அவர் உட­ன­டி­யாக இடை­நிறுத்­தப்­பட்­டுள்ளார் என ஐசிசி அறி­வித்­துள்­ளது.

2021 லங்கா பிரீ­மியர் லீக் (எல்­பிஎல்). அபு­தாபி ரி10 சுற்­றுப்­போட்டி மற்றும் கரீ­பியன் பிரீ­மியர் லீக் (சிபிஎல்) ஆகிய 3 சுற்­றுப்­போட்­டி­யிலும் ஐசி­சியின் ஊழல் எதிர்ப்பு விதி­களை மீறி­யமை தொடர்­பாக 7 குற்­றச்­சாட்­டு­களை டெவோன் தோம­ஸுக்கு எதி­ராக ஐசிசி பதி­வு­செய்­துள்­ளது. 

இப்­போட்­டி­க­ளுடன் தொடர்­பு­டைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம், எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை, மேற்­கிந்­திய கிரிக்கெட் சபை ஆகி­ய­வற்றின் சார்பில் விசா­ரணை நடத்­து­வத்­றகு தனக்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (23)  விடுத்த அறிக்­கையில் ஐசிசி nரிவித்­துள்­ளது. 

ஐக்­கிய அரபு இராச்­சி­ய­துக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடையில் அடுத்த மாதம் துபாயில் நடை­பெ­ற­வுள்ள 3 ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான மேற்­கிந்­திய குழாமில் 33 வய­தான டெவோன் தோமஸ் பெய­ரி­டப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், அவரை போட்­டி­க­ளி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்ள ஐசிசி, அவர் பதி­ல­ளிப்­ப­தற்கு மே 23 ஆம்  திக­தியி­லி­ருந்து 14 நாட்கள் அவ­காசம் அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, ஐசிசி ஊழல் ஒழிப்புப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு தான் முழு­மை­யாக ஒத்­து­ழைப்­ப­தாக மேற்­கிந்­திய கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது. கிரிக்­கெட்டில் ஊழலைக் கண்­டிப்­பதில் தான் உறு­தி­யாக உள்­ள­தா­கவும் அச்­சபை தெரிவித்துள்ளது.

2021 எல்பிஎல் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டெவோன் தோமஸ், அத்தொரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் விளையாடி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் கடைசிப் போட்டியில் புளூ...

2026-09-15 21:08:58
news-image

இங்கிலாந்துடனான ரி20 தொடர் தோல்விகளுக்கு முடிவு...

2026-09-15 19:18:47
news-image

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன்...

2026-09-15 14:49:55
news-image

சாதனை வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த...

2026-09-15 13:52:00
news-image

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் :...

2026-09-15 13:36:58
news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41
news-image

சுப்பர் லீக்கில் முதல் சுற்றை வெற்றியுடன்...

2026-09-13 13:46:46